'அடக்கம் செய்ய நாங்கள் இடம் தருகிறோம்...' 'கொரோனாவினால் இறப்பவரின் உடலை...' விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்த தனது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒரு பகுதியை தருவதாக அறிவித்துள்ளார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்.

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மக்கள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்த உடல்களை தங்கள் பகுதிகளில் அடக்கம் செய்யக்கூடாது என போராட்டம் செய்கின்றனர்.

இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்படைந்த 55 வயது மதிக்கத்தக்க நரம்பியல் நிபுணர் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மாயனத்தில் அடக்கம் செய்ய முயன்ற போது அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரையும், மருத்துவரை கொண்டுவந்த ஆம்புலன்சையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் ஓட்டுனருக்கு மண்டையில் காயமும் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து செய்திதாள்கள் மூலம் அறிந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒரு பகுதியை தருவதாக அறிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் மக்கள் அறியாமையால் செய்யும் இத்தகைய செயல்கள் தங்களுக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும். இந்த இக்கட்டான சூழலில் தங்களின் உயிரை பணயம் வைத்து நம்மை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு உரிய மரியாதையை நாம் அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்