‘அவர் பேசுனது எல்லாம்’... ‘எச்சரிக்கை விடுத்த’... ‘சென்னை உயர்நீதிமன்றம்’... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றின் விசாரணையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்போது, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
மேலும், எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். மேலும், மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது எனவும் விஜயகாந்த் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஷாக் ரிப்போர்ட்... மருந்துகளை 'அதிக' விலைக்கு விற்க... மருத்துவர்களுக்கு 'அனுப்பப்படும்' இளம்பெண்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தப்பா'?...'லிவிங் டூ கெதர்' குற்றமா?...உயர் நீதிமன்றம் அதிரடி!
- திருமண பந்தத்தில் நுழையும் 'கேப்டன்' மகன்.. வைரலாகும் 'நிச்சயதார்த்த' புகைப்படங்கள்!
- அடுத்த 6 மாசத்துக்குள்ள.. 'மெரினா' பீச்.. இப்டித்தான் இருக்கணும்.. அதிரடி உத்தரவு!
- 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா'... ‘3-ம் ஆண்டு நினைவு தினம்'... ‘ஒரு சிறு பார்வை’!
- 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுத் தினம்'... ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’... ‘காவல்துறை அறிவிப்பு’!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- 'பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தி கொலை'...'தமிழகத்தை உலுக்கிய வழக்கு'...உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
- ‘உலகப் படங்களுக்கு நிகரான தமிழ் படங்கள்’... ‘நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்’... விவரம் உள்ளே!