‘தீபாவளி வேற வருது’...!!! ‘கொரோனா 2-வது அலை உருவாகாமல் இருக்க’...!! மக்கள் இதப் பண்ணனும்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வேகமாக அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதனால் கொரோனா நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது.
ஒரு கோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி பயன்படுத்தி தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் என10 லட்சம் பேரிடம் அபராதம் வளர்ச்சியடைந்துள்ளோம்.
கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம். தீபாவளி போன்ற பண்டிகைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல், அலுவலங்களில் ஒன்று கூடுதல் உள்ளிட்டவற்றால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொற்று அதிகம் பரவ பண்டிகைக் காலம் காரணமாகி விடக்கூடாது என்பதால் கவனமுடனும், கட்டுப்பாடுடனும் தீபாவளியை கொண்டாட வேண்டும்.
கொரோனா தொற்று பரவலின் 2-வது அலையில் இருந்து வளர்ந்த நாடுகளே மீள முடியவில்லை. ஆனால், தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை ஒருநாளைக்கு 30 என்ற வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “நாட்டுக்குள் ஒருத்தருக்கும் கொரோனா இல்லனு சொல்லிட்டு திரிஞ்சாரே!”.. ‘மனுசன்’ இவ்ளோ வேலை பண்றாரா?.. வழக்கம் போல் வெளியான ‘வடகொரியாவின்’ அதிர்ச்சி தகவல்கள்!
- 'தீபாவளி பண்டிகைக்கு'... 'சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா???'... ‘சிறப்புப் பேருந்துகள் எப்போது, எங்கிருந்து செல்லும் தெரியுமா??... வெளியான அறிவிப்பு...!!!
- இதுக்கு ஒரு ‘எண்டே’ இல்லையா..! இந்தியாவில் இருந்து ‘சீனாவுக்கு’ பறந்த விமானம்.. கடைசியில் பயணிகளுக்கு ‘காத்திருந்த’ அதிர்ச்சி..!
- 'சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பால்'... 'இன்னும் ஒரு ஏரியாதான் அப்படி இருக்கு!'... 'வெளியான ஹேப்பி நியூஸ்!!!'...
- மூச்சு விட திணறிய இளவரசர்.. ‘ஏப்ரல் மாதமே உண்டான கொரோனா’.. இத்தனை நாள் ரகசியமா வெச்சிருந்ததுக்கு இதுதான் காரணம்!
- இந்த தீபாவளிக்கு ‘பட்டாசு’ வெடிக்கக் கூடாது.. ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்..!
- 'தமிழகத்தின் இன்றைய (02-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'உங்கள மீட் பண்ணவருக்கு...' 'கொரோனா கன்ஃபார்ம் பண்ணியாச்சு...' - WHO இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு...!
- 'கொரோனா' மரண பாதிப்புகளை அறிவிக்க.. 'கோமாளி' வேஷம் அணிந்து 'தோன்றிய' சுகாதார 'அதிகாரி!'.. ‘பாராட்ட வைக்கும் காரணம்!’.. ஆனாலும் வலுக்கும் கண்டனங்கள்!