'எவ்ரிபடி'.. 'ஒருத்தருக்குமே தெரியலயா?'.. 'இவங்களுக்கு மெமோ ரெடி பண்ணுங்க'.. ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாததால், பொறுப்பு முதல்வர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் ரத்தநாள சிகிச்சைப் பிரிவு துவக்க நிகழ்வு உள்ளிட்டவற்றில், முதற்கட்டமாக, உலக உறுப்புகள் தின விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பாக நடைபெற்றது. இதனையொட்டி நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை சிறப்பிப்பதற்காக அமைச்சர் பெருமக்கள் வருகை தந்திருந்தனர்.

அமைச்சர் விஜய பாஸ்கருடன் இணைந்து, அமைச்சர் எஸ்.பி வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்த இந்த நிகழ்ச்சியில், 

கோவை கலெக்டர் ராசாமணி, செவிலியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் , மாணவியர், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

இதில் அம்மா பரிசு நலப் பெட்டகம் உள்ளிட்ட, தமிழக அரசின் பல்வேறு மருத்துவத் திட்டங்கள் குறித்த கேள்விகளை மாணவியரிடமும் பேராசிரியர்களிடமும் விஜயபாஸ்கர் கேட்டிருக்கிறார். ஆனால் யாருக்கும் எந்த கேள்விக்கும் சரிவர பதில் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செவிலியர் கல்லூரி பொறுப்பு முதல்வர் தனலட்ச்மியை அழைத்து மாணவியரிடம் கேட்ட அதே கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கும் பதில் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது 17(a)-ன்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விஜயபாஸ்கர் உத்தரவிட்டதாக தெரிகிறது.

COLLEGESTUDENTS, TNHEALTH, VIJAYABASKAR, COIMBATORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்