'மக்களுக்கு' எது தேவையோ... அதைத்தான் 'சட்டமா' உருவாக்கணும்... 'மாஸ்டர்' தளபதியின் முழுமையான ஸ்பீச் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா தற்போது சென்னை லீலா பேலஸில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆடியோ லாஞ்ச் விழாவிலும் தளபதி விஜய் பேசும் குட்டிக்கதைகள் மிகவும் பிரபலம் என்பதால் இந்த முறை விஜய் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக இருந்தது.

இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு விஜய் மாஸ்டர் ஆடியோ விழாவிலும் பேசி அசத்தி இருக்கிறார். அவர் பேசியதன் தொகுப்பை கீழே பார்க்கலாம்.

* இந்த விழாவுக்கு வர முடியாம ரசிகர்கள் படுற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம் போன தடவ ஆடிட்டோரியத்துக்கு வெளியே நடந்த விஷயங்கள் தான். கொரோனாவும் ஒரு காரணம். ரசிகர்கள் இல்லாம நடத்த அரை மனசா தான் ஒத்துக்கிட்டேன்.

*ஒரு தவிர்க்க முடியாத ஆளா விஜய் சேதுபதி வளர்ந்துருக்காரு. அவர் பேருல மட்டும் எனக்கு எடம் கொடுக்கல. மனசுலயும் கொடுத்து இருக்காரு. விஜய் சேதுபதி கிட்ட இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டீங்க கேட்டேன். அதுக்கு அவர் ' எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்னு' நாலே வார்த்தைல என்ன ஆஃப் பண்ணிட்டாரு.

*ஒவ்வொரு தடவையும் நான் ரொம்ப மோசமா டிரெஸ் பண்றேன்னு என்னோட காஸ்ட்யூம் டிசைனர் எனக்கு இந்த தடவ கோட் சூட் கொடுத்தாரு. நானும் நண்பர் அஜித் மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு போலாம்னு வந்துட்டேன். நமக்கு கோட் சூட் செட் ஆகுதா?

*லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்துல திரும்பி பார்க்க வச்சாரு. கைதி படத்தை திரும்ப, திரும்ப பார்க்க வைச்சாரு. மாஸ்டர் படத்துல என்ன பண்ண போறார்னு தெரிஞ்சுக்க நானும் வெயிட்டிங்.

* மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமா உருவாக்கணுமே தவிர சட்டத்தை உருவாக்கிட்டு அதுக்குள்ள மக்களை அடைக்க கூடாது.

*நதியை ஒரு இடத்துல பூக்கள் தூவி வரவேற்கிறவங்க இருப்பாங்க. நதி போய்கிட்டே இருக்கும். ஒரு இடத்துல பிடிக்காதவங்க கல் எறிவாங்க, நதி போய்கிட்டே இருக்கும். அதாங்க நம்ம வாழ்க்கை. நாம நம்ம கடமையை சரியா செஞ்சுட்டு நதி மாதிரி போய்க்கிட்டே இருக்கணும்.

* இப்போ இருக்க தளபதி 20 வருஷத்துக்கு முன்னால இருந்த இளைய தளபதி கிட்ட என்ன கேட்பீங்க? என தொகுப்பாளர் கேள்வி கேட்க, பதிலுக்கு விஜய் அப்போ வாழ்ந்த மாதிரி அமைதியான ரெய்டு இல்லாத வாழ்க்கை கேட்பேன்  என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்