'கஷ்டத்துல இருக்கறவங்களுக்கு கை குடுங்க' ... பசியோடு வரும் மக்களின் குறை தீர்க்கும் ... விஜய் ரசிகர்களின் 'விலையில்லா உணவகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏழை மக்களுக்கு தினமும் இலவச காலை உணவு வழங்க விலையில்லா விருந்தகம் ஒன்றை விஜய் ரசிகர்கள் ஒன்றை வேலூரில் திறந்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்காக 'விலையில்லா விருந்தகம்' மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் 'விலையில்லா விருந்தகம்' சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் ஆனந்த் கலந்து கொண்டார். இந்த விருந்தகம் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை 109 பேருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி அனைவரும் மாஸ்க் அணிந்து உணவு பரிமாறினர். இது குறித்து வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் வேல்முருகன் கூறுகையில், 'ஏழை மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என விஜய் அவர்கள் கூறியுள்ளார். அதனை கருத்தில் கொண்டு மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவராக தினமும் உணவுக்கான செலவை ஏற்றுக் கொள்கிறோம்' என்றார்.
இட்லி, பொங்கல் என தொடர்ந்து 321 நாட்களுக்கு இலவசமாக காலை உணவுகள் வழங்க வேலூர் மக்கள் இயக்க நிர்வாகிகள் திட்டம் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சார், 500, 200 மட்டும் தான் வாங்குவார்..." "2000 ரூபாய் வச்சிருக்கிறவங்க எல்லாம் வரிசைல நிக்காதிங்க..." ஒரு 'பிரின்சிபிலுடன்' 'லஞ்சம்' வாங்கிய 'சப் கலெக்டர்'...
- சமையலறையில் ‘மண்டைஓடு’, மெழுகுவர்த்தி... ‘மாணவி’ மீதான காதலால்... ‘சினிமா’ பாணியில் வீட்டிற்கே சென்று... ‘பேராசிரியர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- ‘மிக்ஸர்’ வாங்கித்தரேன்னு கூட்டிட்டுப்போன மர்மநபர்.. 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை..!
- ‘என் சாவுக்கு இவங்கதான் காரணம்’.. கொய்யாப்பழம் பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!
- ‘மகன் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் பத்தல’.. ‘எதாவது வேலை வாங்கி தாங்க சார்’.. நம்பிபோன தாய்க்கு நேர்ந்த கொடூரம்..!
- ‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..!
- 'மனைவியின் அவசர முடிவால்’... ‘கதறித் துடித்த கணவர்’... ‘2 பெண் குழந்தைகளுடன்’... 'ஒரே நாளில் நிலைகுலைந்துப் போன குடும்பம்'... 'திகைப் பூட்டிய சம்பவம்'!
- “வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது!”.. “தீவிர கண்காணிப்பில்”.. “சீனாவில் இருந்து வேலூர் வந்த 2 பேர்”!
- ‘நம்பி’ வந்த இளம்பெண்... நண்பர்களுக்கு ‘தகவல்’ கொடுத்து ‘காதலன்’ போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- ‘இவரோட ஐபிஎல் அணியில் ஆட ஆசை’... ‘நியூசிலாந்து அணியில்’... நட்சத்திர வீரராக கலக்கும் வேலூர் பையன்’!