'நடிகர் விஜய்யை சந்திக்க... குடும்பத்தோடு வந்த 'விஜய் மக்கள் இயக்க' முன்னாள் நிர்வாகி'!.. 'காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்ற போலீஸ்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம் நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்திக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணை செயலாளராக குமார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திலும் வேலை செய்து வந்த இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், குமார் தனது குடும்பத்துடன் சென்று, விஜய்யை சந்திக்க வேண்டும் எனக்கூறி, அவரது வீட்டின் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், விஜய் யாரையும் சந்திக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பின்னரும் வீட்டின் முன்பு அவர் நின்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, நீலாங்கரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், அங்கு சென்ற நீலாங்கரை போலீசார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில், சம்பள பாக்கியை பெறுவதற்காக விஜய்யை சந்திக்க வந்ததாக அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால், விஜய் வீட்டின் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அர்த்த ராத்திரியில்... ஒருவர் பின் ஒருவராக... வீடுகளுக்குள் திபுதிபுவென புகுந்த மர்ம நபர்கள்!.. கடப்பாறையை எடுத்து... பகீர் சம்பவம்!!
- VIDEO: 'விஜய் சாங்ல வார்னர் செய்த சேட்டை...' அவர் முகத்துக்கு பதிலா என் 'ஃபேஸ்' இருந்தா 'எப்படி' இருக்கும்...! - டிரென்டிங் ஆகும் வீடியோ...!
- கைதாவாரா யாஷிகா?.. வேகமெடுக்கும் விசாரணை!.. பரபரப்பை கிளப்பும் காவல்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்!
- "அபராதத்தை ஏன் கொரோனா நிவாரண நிதியாக வழங்கக் கூடாது?".. ஸ்மார்ட் கேள்வியால் மடக்கிய நீதிபதி!.. விஜய் தரப்பு கூறிய பதில் என்ன தெரியுமா?
- 'கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பேரு புகழ் எல்லாமே போச்சு'!.. போலீஸ் முன்னிலையில்... கத்தி கூச்சலிட்டு... கதறி அழுத ஷில்பா ஷெட்டி!
- 'வலுக்கட்டாயமாக தாலி கட்டும் ஹீரோ'!.. வைரலாகும் புதிய சீரியலின் ப்ரோமோ!.. தண்டனை விவரங்களை பதிவிட்டு... எச்சரிக்கை விடுத்த ஐபிஎஸ் அதிகாரி!
- 'கேப் விடாமல் அடித்த விஜய்யின் வக்கீல்'!.. சரமாரி கேள்விகளால்... அனல்பறந்த விவாதம்!.. சொகுசு கார் வழக்கில்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- ஒலிம்பிக் பதக்கத்துடன் நாடு திரும்பிய மீராபாய் சானு!.. செம்ம ஷாக் கொடுத்த 'அந்த' அறிவிப்பு!.. வாழ்நாள் முழுவதும் கிடைக்கப்போகும் 'சல்யூட்' மரியாதை!
- 'காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு...' 'மொத்தம் 21 இடங்களில்...' - முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் 'லஞ்ச ஒழிப்பு' போலீசார் 'அதிரடி' சோதனை...!
- என் மகளோட ரீசெண்டா பார்த்த ‘தமிழ்’ படம் இதுதான்.. TNPL மேட்சுக்கு நடுவே சர்ப்ரைஸ் கொடுத்த ‘சின்ன தல’!