Vijay : Fans Meet-க்கு வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர்..! நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதமா? - முழு விபரம்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏராளமான நற்பணிகளை செய்து வருவதுடன் சமீபத்தில் சில தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க நடிகர் விஜய் வருகை தந்திருந்தார். காரில் இருந்து இறங்குவது முதல் உள்ளே சந்திப்புக்கு செல்வது வரை விஜய் வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிக அளவில் வைரலாகி இருந்தது. மேலும் இந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
அதே போல, விஜய் வந்த காரை சாலையில் சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் வீடியோக்களை எடுத்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜய் பயணம் செய்த காரில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது குறித்து தெரிய வந்தது. நடிகர் விஜய் பயணம் செய்த கார் தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி இருந்ததால் அதில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
இந்த விஷயம் சென்னை மாநகர போலீசார் கவனத்திற்கு வர, மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் கருப்பு ஸ்டிக்கர் காரில் ஒட்டப்பட்டிருந்ததால், நடிகர் விஜய் காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வாகன அபராத சீட்டும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனிடையே, இந்த அபராத தொகை நடிகர் விஜய் சார்பில் செலுத்தப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
மற்ற செய்திகள்
"அவர் பேட்டிங்கை பாக்கவே சங்கடமா இருக்கு".. சூரிய குமாரின் அதிரடியை பார்த்து அசந்துபோன மேக்ஸ்வெல்..!
தொடர்புடைய செய்திகள்