'திமுக தலைவர் ஸ்டாலினின் 'Work From Home' எப்படி இருக்கும்'?...இதோ வெளியாகியுள்ள வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்கள் மற்றும், தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது வீட்டிலிருந்தவாறே எவ்வாறு கொரோனா குறித்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார் என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ பதிவை, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் திமுகவின் மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின்  வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களையும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், அந்தந்தப் பகுதிகளின் பிரச்சினைகளையும் அவர் கேட்டறிந்தார். துப்புரவுப் பணியாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை கட்சியினர் செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதேபோன்று மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு எப்படி இருக்கிறது, மற்றும் வீடு வீடாக வந்து சோதனைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனையும் அவர் மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்தார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம். மக்கள் செயலாளர்களாக செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை கூறினேன். கொரோனா காலத்தில் திமுக சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்தேன், என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்