'பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை'... 'செல்லம் யாருடா நீ'... 'சிறுவனின் மாஸ் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சில பாடல்கள் காலம் கடந்து பலரது மனதில் நிற்கும். ஆனால் சில பாடல்கள் மட்டுமே, நூற்றாண்டு கடந்தும்  கூட பலரது மனங்களில் நீடித்து இருக்கும். அது போன்ற ஒரு பாடலை பாடி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் பள்ளிச் சிறுவன் ஒருவன்.

கடந்த 1962 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அன்னை. . கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற பாடல் தான் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. இந்த பாடலுக்குத் தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும், சிறந்த பாடகராகவும் விளங்கிய ஜே.பி.சந்திரபாபு ஆடியிருப்பர். இந்த பாடலை அவரே பாடியும் இருப்பார். பல வருடங்கள் கடந்தாலும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிலையில் இந்த அற்புதமான பாடலை பாடி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறான் பள்ளிச் சிறுவன் ஒருவன். இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுவன் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால் அவன் படும் விதம் சில இடங்களில் ஜே.பி.சந்திரபாபுவை நியாபகபடுத்தாமல் இல்லை. இந்த சிறிய வயதில் பாடலின் உன்னதத்தை உணர்ந்து அந்த சிறுவன் பாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

TWITTER, SCHOOLSTUDENT, VIDEO, SCHOOL BOY, J.P.CHANDRABABU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்