'யாரெல்லாம் 'அப்பா'வ ரொம்ப மிஸ் பண்றீங்க'?... 'நெகிழ வைத்த தந்தை'... மனதை உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வயதான தந்தை ஒருவர் தனது மாற்று திறனாளி மகளை தூக்கி கொண்டு ராட்டினத்தில் வைக்கும் வீடியோ காட்சி பலரது மனதையும் நெகிழவைத்துள்ளது.

''தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், தந்தை அன்பின் முன்னே, தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே'' என்ற நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளை, நினைவுக்கு கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது அந்த வீடியோ. அப்பா இருக்கும் போது ''என்ன இந்த ஆளு, எப்போ பாத்தாலும் சும்மா நம்மள திட்டிக்கிட்டே இருக்காரே'' என பலரும் நினைப்பது உண்டு. ஆனால் ஒரு நாள் அவரது வார்த்தை ஒரு நிரந்தர மௌனதிற்கு செல்லும் போது தான், அப்பா இல்லாத வலி என்ன என்பது நமக்கு புரியும்.

அந்த வலியை பெரும்பாலானோர் அனுபவித்து இருப்பார்கள். தாய் என்பவள் கண்ணீர் விட்டு அழுது விடுவாள். ஆனால் தந்தையோ அனைத்து சோகங்களையும் மனதிற்குள் வைத்து பூட்டி கொண்டு, தன்னை எப்போதும் ஒரு வீரன் போலவே காட்டி கொள்வார். அதன் காரணமோ என்னவோ, பெரும்பாலான நேரங்களில் நாம் தந்தையோடு ஒரு இடைவெளியிலேயே இருக்கிறோம்.

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ பலர் தங்களது தந்தையை, மீண்டும் ஒரு நொடி நினைத்து பார்க்க வைத்திருக்கிறது. ''வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம், தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்'' இந்த வரிகள்  எனோ மீண்டும் மீண்டும் நெஞ்சை கனமாக்குகிறது.

TWITTER, FATHER, VIDEO, VIRAL, LOVE, PHYSICALLY CHALLENGED, DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்