VIDEO: 'சைரன் சத்தத்துடன் வந்த ஆம்புலன்ஸ்...' 'உடனே முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்...' - காவல் துறையினர் வெளியிட்ட 'வைரல்' வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடும் வீடியோ காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாகவே ஆம்புலன்ஸ் அவரச தேவைக்காக உயிர்காக்க செல்லும் வாகனம். ஆம்புலன்ஸ்ஸிற்கு வழிவிடும் தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி போக்குவரத்து காவல் துறை எத்தனையோ வழிகளில் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றபோதிலும் எதையுமே வாகன ஓட்டிகள் கண்டுகொள்வது இல்லை.

அதோடு ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சிலர் இது தான் சாக்கு என்று ஆம்புலன்ஸ் பின்னாடியே வால் பிடித்துக்கொண்டு செல்வர்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட வேண்டும் என்ற முக்கியத்தை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட்டு சென்ற வீடியோவை சென்னை மாநகர காவல் துறை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளது

இந்த வீடியோ கடந்த 29-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, சென்னை-கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் முதலமைச்சர் கார் சென்றபோது சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரம் அவசரமாக வந்துள்ளது

ஆம்புலன்ஸ்ஸின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்த மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட்டார். பின்னர், ஆம்புலன்ஸ் அந்த இடத்தை கடந்த பிறகு தனது பயணத்தை தொடர்ந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதோடு முதலமைச்சரின் இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த செயல் அனைத்து ஓட்டுநர்களுக்கும் ஒரு பாடம் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்