'கொரோனா நேரத்துல இது வேறயா'...'திடீர்னு பாறையில் ஊர்ந்த விநோதம்'... கதிகலங்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'கொரோனா நேரத்துல இது வேறயா'...'திடீர்னு பாறையில் ஊர்ந்த விநோதம்'... கதிகலங்க வைக்கும் வீடியோ!
கொரோனா தொற்றினால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கும் நிலையில், பலரும் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து ட்விட்டரில் வைரலான வீடியோ ஒன்று பலரையும் கதிகலங்க செய்துள்ளது.
ட்விட்டரில் வைரலான அந்த வீடியோவில், பாறையில் கருப்பு நிறத்தில் வினோதமாக இருக்கும் உயிரினம் ஒன்று திடீரென ஊர்ந்து செல்கிறது. இது பார்ப்பதற்கு சற்று அதிர்ச்சியாக இருக்கும். உடனே அங்கிருந்த நபர் ஒருவர் அதனை கத்தியால் கீறுகிறார். இருப்பினும் அது எந்த வித எதிர்ப்பும் காட்டாமல், அது தானாக ஊர்ந்தபடி செல்கிறது. 14 நொடிகளே ஓடும் இந்த வீடியோ ட்விட்டரில் செம வைரலானது. இதுவரை அந்த வீடியோ 19.5 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது என்ன உயிரினம் தெரியுமா என கேட்டு பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். பலரும் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது என்ன கமெண்ட் செய்து வருகிறார்கள். வீடியோவை பார்த்த பலரும் இது 'ஸ்பைடர் மேன்' கார்ட்டூன் மற்றும் திரைப்படங்களில் ‘வெனாம்' என்கிற கற்பனை கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது, என கூறியுள்ளார்கள்.
இதனிடையே வீடியோவில் இருக்கும் உயிரினம் குறித்து 'என்டிடிவி' செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவலில் இது, ''பாட்டில் லேஸ் புழு'' என்றும், கிட்டத்தட்ட 180 அடி வரை இது வளரும் என்றும் சொல்லப்படுகிறது. தன்னைத் தாக்க வருபவர்கள் மீது இந்தப் புழு, ஒரு வித நஞ்சைப் பாய்ச்சும் எனவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'!
- ‘இது ஒரு பாடம்’... ‘திடீரென உடைந்த கட்டமைப்பு’... ‘வெறுப்பூட்டும் அனுபவம்’... ‘மீண்டு வந்த இளவரசர் பகிரும் உருக்கமான வீடியோ’!
- Video: சண்டைனா 'இப்டி' இருக்கணும்... 'ஹெட்போன்'ல கேட்டுப்பாருங்க பாஸ்... சும்மா தெறிக்குது!
- Video: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ!
- 'விழித்திருப்போம்; விலகியிருப்போம்' 'வீட்டிலேயே இருப்போம்' 'முதல்வரின் ட்விட்டர்' பதிவுகளுடன் 'இணைந்திருப்போம்'...
- Video: 'வெயிட்' ரொம்ப அதிகம் அதனால என்ன?... செம 'ஸ்கெட்ச்' போட்டு... மர உச்சிக்கு மானை 'அலேக்காக' தூக்கிச்சென்ற சிறுத்தை!
- ‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்!
- 'தனியா இருந்தா என் மனசுல இதெல்லாம் தோணுது'...'பதறிய கோவை இளைஞர்'...அடுத்து நடந்த திருப்பம்!
- 'மது' அருந்துவது 'கொரோனா' தொற்றை தடுக்குமா?... உலக 'சுகாதார' அமைப்பு விளக்கம்!
- WATCH VIDEO: ‘லாக் டவுன் நேரத்தில் ஏன் இப்படி பண்றீங்க?’... ‘திரைப்படம் போலவே, நிஜத்தில் வெளுத்து வாங்கும் குழந்தை நட்சத்திரம்’... வைரலாகும் வீடியோ!