VIDEO: வெள்ளத்துல 'முதலை' வந்துச்சுன்னு பரவியது உண்மையா...? 'தீயாக பரவிய ஃபோட்டோ மற்றும் வீடியோ...' - 'விளக்கம்' அளித்த மாவட்ட ஆட்சியர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதிலும் நேற்று (28-11-2021) காலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகள், வீடுகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்துள்ளன.

Advertising
>
Advertising

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை ஒன்று உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வீடியோ ஒன்றும், போட்டோ ஒன்றும் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் “செங்கல்பட்டு மாவட்டம் வல்லாஞ்சேரி கூட் சாலையில் முதலை உலா வருவதாக தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. உண்மையில் அது வீடுகளில் உபயோகித்து தூக்கி போட்ட பழைய பஞ்சு மெத்தை. ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி இருக்கும் காரணமாக மெத்தை மிதந்ததை முதலை என இணைய தளங்களில் வதந்தி பரப்பப் பட்டுள்ளது” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் கேகே நகர் பகுதியில் முதலை சுற்றி வருவதாக புரளி கிளப்பியுள்ளது. எப்போதுமே வெள்ள நீரில் முதலைகள் வருவது குறைவு என கூறப்படுகிறது. அப்படியே முதலைகள் ஊருக்குள் வர வேண்டும் என்றால் முதலை பண்ணை மற்றும் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் வெள்ள நீரில் மூழ்கினால் மட்டுமே சாத்தியம்.

அதுமட்டுமல்லாமல், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் முதலைகள் இனப்பெருக்கம் செய்வது வாடிக்கை. முட்டைகளும் அந்த நேரத்தில் தான் முதலைகள் போடும். அதனால் இந்த படம் தவறானது என கூறப்படுகிறது. எனவே அதுவும், தாய்லாந்து அல்லது தைவான் நாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

VIDEO, GUDUVANCHERI, CROCODILE, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்