சிங்கத்திற்கும், புலிக்கும் நடந்த சண்டை... ஒரே தம்மில்... தூக்கி அடிச்சு ஜெயிச்சது யாரு?... நீங்களே பாருங்க... வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காட்டின் ராஜாவாக நாம் கூறி வருவது சிங்கத்தைத் தான். அதேபோல், புலி பதுங்கி பாய்ந்து, சிங்கத்திற்கு சமமாக மிரட்டி பயமுறுத்தும் விலங்காக நமக்குத் தெரியும். இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையில் சண்டை வந்தால், யார் ஜெயிப்பார்கள் என நாம் கற்பனை செய்தது உண்டு.

இந்நிலையில், சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) என்ற வனத்துறை அதிகாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வழக்கமாக வன விலங்குகளின் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான பல வீடியோக்களை பகிர்ந்து வருபவர். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 24 நிமிடங்கள் மிகவும் மெதுவாக ஓடும் அந்த வீடியோவில், புல் தரை மீது படுத்துள்ள புலி அருகில், சிங்கம் ஒன்று மெதுவாக வந்து அதன் மீது விழுந்து சண்டையிட ஆரம்பிக்கிறது.

அப்போது திரும்பிய வேகத்தில், ஒரே குத்தில் குத்துச் சண்டை வீரர் போல், தனது காலால் சிங்கத்தை தூக்கி வீசியெறிகிறது. இதில் வலியை உணர்ந்த அந்த சிங்கம் அப்படியே புலியிடம் கிட்டே வராமல் சென்று விடுகிறது. சிங்கத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை புலி. மாட்டின் மண்டை ஓட்டை கூட ஒரே அடியில் பிளக்கும் வலிமை புலியின் பாதங்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் ரோம் நாட்டில் புலியும் சிங்கமும் மோதிய போட்டிகளில் புலியே வென்றிருப்பது வரலாறு உண்டு.

TIGER, LION, VIRAL, VIDEO, WATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்