VIDEO: விஜிபி மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) கடல்வாழ் உயிரினங்கள் பூங்கா - மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க அரிய வாய்ப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவின் தலை சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான விஜிபி யூனிவெர்சல் கிங்டம் (VGP Universal Kingdom), கடல்வாழ் உயிரினங்களுக்கான விஜிபி மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) என்கிற பிரத்யேக கண்காட்சியை உருவாக்கி உள்ளனர்,

Advertising
Advertising

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், மக்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வது முடியாததாக உள்ளது. இருந்தாலும், அந்த பூங்காக்களை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள் விஜிபி யூனிவெர்சல் கிங்டம் நிறுவனத்தினர்.

அப்படி, விஜிபி மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) குறித்து, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) விஜிபி பிரேம் தாஸ் கூறும் போது, "ஊரடங்கு காலத்திலும் கடல்வாழ் உயிரினங்களின் உணவு மற்றும் பராமரிப்புகளுக்கு எந்த குறையும் ஏற்படாமல் முறையான வகையில் செயல்படுத்தி வருகின்றோம். தற்போது கடல் உயிரிகளை விரும்பும் மக்களுக்காக ஒரு அரிய சந்தர்ப்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதன் வழி, விஜிபி மரைன் கிங்டம்மில் (VGP Marine Kingdom) இருக்கும் ஏதாவது ஒரு கடல் உயிரியை அவர்கள் தத்தெடுத்து கொள்ளலாம். மேலும் அவர்கள் தத்தெடுக்கும் மீன் வகையினை எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்க அனுமதி அளிக்கிறோம், தத்தெடுக்கும் நபருக்கு மீன்கள் இரை உண்ணும் வீடியோவும் நன்றிக்கடனாக அனுப்பவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவிவரும் இந்த சூழலில் பொருளாதார வகையிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் விஜிபி மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) நுழைவு டிக்கெட்டின் விலையை பாதியாகவும் குறைத்துள்ளனர். அதன்படி, இந்த டிக்கட்டை, இந்த லாக்டெளன் சமயத்திலும் வாங்க முடியும். லாக்டெளன் முடிந்த பிறகு, மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) திறக்கும் போது, தற்போது வாங்கிய டிக்கெட்டை பயன்படுத்தி, குடும்பத்துடன் மரைன் கிங்டம் சென்று கடல் உயிரினங்களை கண்டு மகிழலாம்.

இந்த டிக்கெட்டின் முடிவு காலம் ஒரு வருடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் வாங்கும் தேதியிலிருந்து 365 நாட்களுக்குள் நாம் சென்று விஜிபி மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) பொழுதுபோக்கு பூங்காவில் நம் பொன்னான நேரத்தை குடும்பத்தோடும், வன உயிரிகள் மற்றும் கடல்வாழ் உயிரிகளோடு செலவழிக்கலாம்.

 

மற்ற செய்திகள்