EXCLUSIVE: விடுதலை படப்பிடிப்பு இடைவேளையில் விபத்து.. உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர்.. நடந்தது என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்'விடுதலை' திரைப்பட படப்பிடிப்பின் இடைவேளையின்போது, சண்டைப் பயிற்சிக் கலைஞர் ஒருவர் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை. நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர்தான், விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று, அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.
விடுதலை படத்தை பொறுத்தவரை நடிகர்கள் குழுவில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். இந்த விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக விடுதலை படத்தின் படப்பிடிப்பு சிறுமலை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, வண்டலூர் பகுதியில் நடந்து வருகிறது
இந்த படப்பிடிப்பில் ரயில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில்தான் சண்டை பயிற்சி கலைஞர் சுரேஷ் குமார் என்பவர் பயிற்சி ஒத்திகையின்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக நமது தரப்பில் இருந்து விடுதலை படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம்.
நமக்கு கிடைத்த பிரத்தியேக தகவலின்படி, மரணமடைந்த சண்டைப் பயிற்சியாளரின் பெயர் சுரேஷ் குமார், இவர் 59 வயது நிரம்பியவர்.
படப்பிடிப்பு இடைவேளையில் மதியம் 2.15 மணியளவில், சண்டைக் காட்சிகளுக்கான வழக்கமான ஒத்திகையின் போது இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்துள்ளது. சுமார் 15 அடி உயரத்தில் சண்டை காட்சிக்கான ஒத்திகையில் ஈடுபடுவது இயல்பான ஒன்றே. எனினும் இந்த பயிற்சியில் ஈடுபட்ட போது, குறிப்பிட்ட பயிற்சி கலைஞர் சுரேஷ் குமார், கேபிள் அறுந்ததால் விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தின் போது இயக்குநர் வெற்றிமாறன் உட்பட, இயக்குநர் குழுவினர் சம்பவ இடத்தில் இல்லை. ஆம், அனைவரும் உணவு இடைவேளைக்கு சென்ற போது சண்டைப் பயிற்சியாளர்கள் குழு மட்டும் ஒத்திகையில் இருந்தபோது இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. படத்தின் நாயகன் நடிகர் சூரியும் இச்சம்பவத்தின் போது கேரவனில் உணவருந்த சென்றிருந்தார்.
இதுகுறித்து படக்குழுவினர் தரப்பினர் நம்மிடம் பேசும்போது, "இந்த துயரச் சம்பவம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் வேதனை அடைந்தார். இயக்குநர் வெற்றிமாறன் எப்பொழுதும் படக்குழுவினரை கவனமாக இருக்க சொல்லி அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.
கொரோனா முடிந்த பிறகு கூட, வெற்றிமாறனின் படக்குழுவினர் அனைவரும் முகக்கவசம அணிந்து கொண்டுதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளோம். ஆனால் இச்சம்பவம் மிகப்பெரிய துயரம். இந்த கலைஞரின் இழப்பில் அனைவருமே பங்கெடுத்து கொள்கின்றனர்.எங்களது இயக்குநரின் அறிவுறுத்தலின்படி படக்குழுவில் அனைவருமே மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் கவனத்தையும் தாண்டி எதிர்பாராதவை சில சமயங்கள் நடந்து விடுகின்றன. சண்டைப் பயிற்சியாளர் சுரேஷ் குமாருக்கு நடந்தது அப்படியானதுதான்" என தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை: மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் மோதியதால் சேதமான மாநகர பேருந்து.!
- புனே நெடுஞ்சாலை விபத்தை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து.. என்ன நடந்தது?
- நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. கல்யாணமாகி ஒரே வாரத்துல மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் கிராம மக்கள்..!
- விமான Toilet -ல் சிகரெட் பிடித்த நபர்.. பகீர்னு அடிச்ச அலாரம் .. பதட்டமாகி மனுஷன் செஞ்ச காரியம்..
- "தீபாவளிக்கு வீடியோ கால் பேசுனான்".. அமெரிக்காவில் படித்த மகன்.. ஒரே நாளில் நொறுங்கி போன குடும்பம்.. துயரம்!!
- இளம் மகனை விபத்தில் பறிகொடுத்த அதிர்ச்சியில் பெற்றோர் எடுத்த முடிவு.! கோவையை உலுக்கிய சோகம்..
- பாம்பன் பாலம் : 10 நாளுல 2வது தடவ.. நேருக்கு நேரா வந்த பேருந்துகள்.. அடுத்த செகண்டுல நடந்த துயரம்..!
- அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்.. மனைவி கையில் இருந்த செல்போன் சார்ஜர்??.. ஒரு சில நிமிடத்தில் நடந்த துயரம்!!
- Wrong ரூட்டில் வந்த டிராக்டர்?.. "நேரா பென்ஸ் கார் மேல".. மறுகணமே சாலையில் அரங்கேறிய பயங்கரம்!!
- "திரும்பவும் நடிக்க வைப்பேன்" - உதவிய VJS, சூரி, விஷ்ணு விஷால் .. ஹரி வைரவன் மனைவி உருக்கம்.! Exclusive