இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கே வந்தது இல்லயாம்.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகின் மிக உயர்ந்த வைரமாக கருதப்படும் நீல நிற வைரக் கல் வரும் ஏப்ரலில் ஏலத்திற்கு வருகிறது. இது சுமார் 359 கோடிக்கு ஏலம் போகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள பிரபல ஏல நிறுவனமான ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த பிரம்மாண்ட ஏலம் நடைபெற இருக்கிறது.

Advertising
>
Advertising

வைரம்

கார்பனின் இறுகிய பிணைப்பின் காரணமாக வைரங்கள் உருவாகின்றன. மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வைரங்கள் அதிகமாக கிடைக்கின்றன. பொதுவாக பூமியின் ஆழத்தில் காணப்படும் வைரங்கள் தாதுக்களின் அளவுகளை பொறுத்து நிறம் மாற்றம் அடைகின்றன. இதில் நீல நிற வைரங்கள் மிகவும் அபூர்வமாக கிடைப்பவை.

நீல நிறக் கல்

தற்போது ஏலத்திற்கு வரும் நீல நிற வைர கல், தென் ஆப்பிரிக்காவின் கல்லினன் சுரங்கத்தில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீல வைரங்களிலேயே மிகப் பெரியது மற்றும் மிக விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த அபூர்வமான நீல நிற வைர கல்.

15.10 கேரட்

தற்போது சோதஃபி என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள இந்த வைரம் 15.10 கேரட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 10 கேரட்டிற்குள் குறைவான வைரங்களே அதிகம் ஏலமிடப்பட்டுள்ளன. மிக அரிதாக 10 கேரட்டிற்கும் அதிமான வைரங்கள் ஏலமிடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை 15 கேரட்டிற்கு அதிமான வைரம் ஏலமிடப்பட்டதேயில்லை என்கிறார்கள் வைர விற்பனை நிபுணர்கள்.

இதனால் வரும் ஏப்ரலில் ஏலத்திற்கு வரும் இந்த வகை வைரத்திற்கு கடும் போட்டி நிலவும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

முந்தைய சாதனை

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏலத்திற்கு வந்த ஓப்பன்ஹைமர் ப்ளூ வைரம் தான் இதுவரை அதிக தொகைக்கு ஏலத்தில் விடப்பட்ட வைரமாகும். ஜெனீவாவின் கிறிஸ்ட்-ல் நடந்த இந்த ஏலத்தில் 57.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 4,29,43,53,000 ரூபாய்) இந்த வைரம் ஏலம் போனது. இத்தனைக்கும் ஓப்பன் ஹைமர் 14.6 கேரட் தான். ஆகவே, இந்த சாதனையை தற்போது ஏலத்திற்கு வர இருக்கும் வைர கல் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

வைரம், ஏலம், நீலநிறவைரம், DIAMOND, BLUEDIAMOND, AUCTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்