Bharathi Kannamma: மன்னிப்பு கேட்டு கதறிய பாரதி..! ‘கான்ஃபிடண்ட்டே இல்லயே?’ கலாய்ச்சுவிடும் கண்ணம்மா.. வெண்பா எடுத்துக்கொடுத்த புது லாஜிக்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், நாயகன் பாரதி டி.என்.ஏ டெஸ்ட்டை எடுத்திருந்த நிலையில், ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் பாரதியின் குழந்தைகள் தான் என்பதும் உறுதியானது. பாரதியின் நீண்ட நாள் சந்தேகங்கள் தீர்ந்த நிலையில், மறுபுறம் தனது அப்பா யாரென தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்திருந்தார் ஹேமா. அப்போது அவரிடம் நான் தான் உன் அப்பா என பாரதி கூறவும் செய்கிறார்.

Bharathi Kannamma: மன்னிப்பு கேட்டு கதறிய பாரதி..! ‘கான்ஃபிடண்ட்டே இல்லயே?’ கலாய்ச்சுவிடும் கண்ணம்மா.. வெண்பா எடுத்துக்கொடுத்த புது லாஜிக்..!
Advertising
>
Advertising

Also Read | சபரிமலையில் விஐபி தரிசன விவகாரம்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த அதிரடி உத்தரவு..!

பின்னர் அனைவர் முன்னிலையிலும் கண்ணம்மாவிடம் பாரதி மன்னிப்பு கேட்கிறார். விட்டால் இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள் என இதை கண்டதும் கொதித்து போகும் வெண்பா, "இந்த ரிசல்ட் உண்மையா இருக்குறதுக்கு வாய்ப்பே இல்ல பாரதி. இது Fake. உன்ன யாரோ ஏமாத்தி இருக்காங்க. 2 தடவ Fertility Test எடுத்தே. ரெண்டு தடவையும் என்ன ரிசல்ட் வந்துச்சு. இந்த ஜென்மத்துலயே உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காதுன்னு. அப்புறம் எப்படி இந்த குழந்தைங்களோட DNA மேட்ச் ஆகும்?" என வெண்பா ஆவேசத்துடன் கூறினார்.

venba new logic to DNA Result bharathi kannamma trending

அங்கிருந்த அனைவரும் இதனைக் கேட்டு அதிர்ச்சி ஆக, பாரதியை நோக்கி கேள்வி கேட்கும் கண்ணம்மா, "என்ன சார் திருதிருன்னு முழிக்குறீங்க?. வெண்பா கேக்குற கேள்வி நியாயமா தானே இருக்கு. பதில் சொல்லுங்க சார்" என்கிறார். இதனைக் கேட்டதும் என்ன சொல்வதென தெரியாமல் முழித்துக் கொண்டே நிற்கிறார் பாரதி. ஆனால் அனைவரும் கிளம்புங்கள் பிரச்சனை எல்லாம் முடிந்தது என கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா, பாரதியையும் கண்ணம்மாவை அழைத்துச் செல்ல முற்படுகிறார்.

அப்போது அவரை தடுத்துவிட்டு, மீண்டும் தொடரும் கண்ணம்மா, “வெண்பா கேட்பது ஒரு லாஜிக்கான கேள்வி. குழந்தை பாக்கியமே இல்லாத பாரதி எப்படி இரண்டு குழந்தைகளின் டி.என்.ஏ-வுடன் மேட்ச் ஆக முடியும் என்கிற கேள்விக்கு பாரதி பதில் சொல்லட்டும் அப்புறம் கிளம்பலாம்.” என்று சொல்கிறார். அப்போது பாரதியோ, வெண்பாவிடம் நேருக்கு நேராக பார்த்து என்னிடம் டிஎன்ஏ ரிசல்ட் இருக்கிறது. நான் எடுத்து பார்த்தேன். நீ சொல்லும் லாஜிக் எல்லாம் நான் நம்பவில்லை. அதற்கு என்னிடம் பதிலும் இல்லை” என்று சொல்லிவிடுகிறார்.

மேலும் கண்ணம்மா, “இப்போ இப்படி சொல்லிவிட்டு, வெண்பா எடுத்துக் கொடுத்த லாஜிக் வேலை செய்து, வீட்டுக்கு போனதும் அதை பற்றி யோசித்து மாற்றி பேசினால் என்ன செய்வது?” என கேட்க, முதலில் தடுமாறிய பாரதி, “நான் மாத்திலாம் பேச மாட்டேன்” என்கிறார். அதற்கு கண்ணம்மா, “ஒரு கான்ஃபிடண்ட்டே இல்லையே? சுரத்தையே இல்லாமல் பதில் இருக்கே” என சொல்ல, பின்புதான் பாரதி உறுதியாக, “இல்லை.. நான் அப்படியெல்லாம் பேச மாட்டேன்” என்கிறார். இப்படி விறுவிறுப்புடன் பாரதி கண்ணம்மா நகர்கிறது.

Also Read | "அட, அமர்க்களமான ஐடியாவா இருக்கே"... ஸ்கூட்டர் உதவியுடன் தொழிலாளர்கள் செஞ்ச அற்புதம்.. வியந்து போன ஆனந்த் மஹிந்திரா!!

BHARATHI KANNAMMA TODAY EPISODE, BHARATHI KANNAMMA PROMO, VIJAY TV, TV SERIAL UPDATE, BHARATHI KANNAMMA NEW PROMO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்