12 சென்ட் நிலத்துக்காக... உறவினர்கள் வெறிச்செயல்!.. சிதைந்து போன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்12 சென்ட் நிலத்திற்காக உறவினரை கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணன். இவரது மனைவி ஜமுனா (எ) சின்னம்மா. கிருஷ்ணனின் மகனும் தற்போது இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக உள்ள கிருஷ்ணனும், இவரது அண்ணன் தாமோதரன் ஆகிய இருவரும் 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதில் 12 சென்ட் பொது இடத்திற்கு இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே 12 சென்ட் பொது இடத்தில் கிருஷ்ணண் தண்ணீர் தொட்டி கட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று மாலை கிருஷ்ணனுக்கும் அண்ணண் தாமோதரன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் தாமோதரனின் மகன்கள் முருகன், காந்தி, பாஸ்கர் ஆகியோர் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பனமடங்கி காவல் துறையினர் இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிருஷ்ணண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மனைவி ஜமுனா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பனமடங்கி காவல் துறையினர் தாமோதரன் மற்றும் அவரது மகன்கள் முருகன், காந்தி, பாஸ்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உள்ளூர், வெளியூர்ன்னு 'ஜல்லிக்கட்டு'ல... 'கொடிகட்டி' பறந்த 'காளை'ங்க அது... அதுக்கு இப்டி ஒரு 'கொடுமை'ய பண்ணிட்டானுங்க... பதற வைக்கும் 'கொடூரம்'!
- ஆட்டுக்குட்டியை 'கடித்த' வளர்ப்பு நாயால்... அண்ணன் 'மகனுக்கு' நேர்ந்த கொடூரம்... 3 பேர் கைது!
- ‘முதலிரவில் தகராறு’!.. புதுமாப்பிள்ளை கையிலெடுத்த விபரீதம்.. கல்யாணம் ஆன ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!
- மதிய நேரத்துல யாரோ 'கத்துற' சத்தம் கேட்டுச்சு... அங்க போயி பாத்தா... 'நடுரோட்டில்' நடந்த 'கொடூரம்'!
- வழக்கம் போல 'அண்ணனும்', 'தம்பியும்' ஒண்ணா 'குடிச்சுட்டு' வந்தாங்க... ஆனா நேத்து நெலம கைய மீறி போயிடுச்சு... குரூரத்தில் கொண்டு நிறுத்திய 'குடிப்பழக்கம்'!
- மூணு வருஷமா 'பேசிட்டு' இருந்தவ... திடீர்னு 'நிப்பாட்டிட்டா'... கொடூரத்தில் முடிந்த 'கள்ளக்காதல்' விவகாரம்!
- ‘காதல் கல்யாணம்’!.. உதவி செஞ்ச இளைஞருக்கு நடந்த கொடூரம்.. மதுரை அருகே அதிர்ச்சி..!
- ‘தினமும் ஏன் இப்டி குடிச்சிட்டு வர்ரீங்க?’.. கேள்வி கேட்ட ‘காதல் மனைவி’.. கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் செய்த கொடூரம்..!
- "உயிர்பசியில் தீண்டாமை கொடுமை!".. 17 வயது சிறுவன் என்றும் பாராமல்... எதற்காக இந்த வெறி?
- 'கர்ப்பமடைந்த' மகள்... அந்த பையனோட 'கொழந்த' எங்க பொண்ணு 'வயத்துல' வளருறதா?... 'பெற்றோர்களால்' பெண்ணுக்கு நேர்ந்த 'கொடூரம்'!