'உதவி பண்றேன்னு வந்து...' 'இப்படி பொழப்புல மண்ணு வாரி போட்டுட்டாங்களே...' - அதிர்ச்சியில் உறைந்து நின்ற போட்டோகிராபர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாவட்டத்தில் உதவி செய்வது போல 4 லட்சம் மதிப்புள்ள கேமராவை பிடுங்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டங்களில் குடியாத்தம் காங்கிரஸ் ஹவுஸ் தெருவில் வசித்து வரும் மோகன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு லத்தேரி பகுதியில் நிச்சயதார்த்த  நிகழ்ச்சியில் வீடியோ கவரேஜ் எடுத்துவிட்டு தன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது தீடீரென பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் மோகனை எழுப்ப உதவி செய்துள்ளனர். அப்போது எழுந்த மோகனை மீண்டும் தரையில் தள்ளிவிட்டு அவரிடமிருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை தூக்கிக்கொண்டு பைக்கில் தப்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்