"இனிமே எல்லாம் 'நல்லதா' நடக்கும்னு நெனச்சோம்,,.. 'இப்டி' பண்ணுவாங்கன்னு 'கனவு'ல கூட நெனைக்கல",,.. 'விரக்தி'யில் கலங்கி நிற்கும் 'காதலன்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் மாவட்டம் ஏலகிரி மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அனுராதா. இவரது மகளான நந்தினி பி.எட் படித்து முடித்து விட்டு பயிற்சி ஆசிரியையாக உள்ளார்.
நந்தினியும், அதே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வரும் அச்சுதன் என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் அனுராதாவுக்கு தெரிய வந்துள்ளது. அச்சுதனுக்கு பெற்றோர்கள் இல்லாத நிலையில், அவர் ஏழை என்பதால் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அனுராதா, நந்தினிக்கு வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
இதன் காரணமாக, நந்தினி மற்றும் அச்சுதன் ஆகியோர் வீட்டை விட்டு இறங்கி, கோவைக்கு வந்துள்ளனர். அங்கு ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒண்டிப்புதூர் என்னும் பகுதியல் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். இந்த தகவலை அச்சுதனின் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட அனுராதா, தனது உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற அனுராதா மற்றும் உறவினர்கள், ஊரறிய இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதாக வாக்குறுதியளித்து, கார்களில் ஏற்றி அழைத்து வந்துள்ளனர். வரும் வழியில் சேலம் சுங்கச்சாவடி அருகே, ஹோட்டல் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்த போது, தனது மகளுக்கும், அச்சுதனுக்கும் பதிவு திருமணம் நடைபெறவில்லை என்பது அனுராதாவுக்கு தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அனுராதாவின் குடும்பத்தினர் அச்சுதனை அடித்து உதைத்து நந்தினியை மட்டும் தனியாக மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதன் காரணமாக, தனது மனைவியை அவளது பெற்றோர்கள் கடத்திச் சென்று விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால், திருமணம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் அச்சுதன் தவித்து போயுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அங்க எல்லாம் கம்மியாகுது'... 'இந்த 3 மாவட்டங்கள்தான்'... 'இரண்டே வாரத்தில் 2 மடங்கான எண்ணிக்கை'... 'தமிழக கொரோனா நிலவரம்'...
- "NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!
- 'இரவு 12 மணிக்கு கேக் கட்டிங்'... 'ஜாலியா காரில் வந்த நண்பர்களுக்கு நடந்த கோரம்'... காரின் டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
- ‘தொண்டையில்’ சிக்கிக்கொண்ட ‘சிக்கன் துண்டு’!.. கோவையில் ‘4 வயது சிறுவன்’ உயிரிழந்த ‘சோகம்’.. எப்படி நடந்தது?
- மொத்தம் 75,000 ஆயிரம் ஊழியர்களை... வீட்டுக்கு 'அனுப்பிய' நிறுவனங்கள்... அதிர்ந்து போன 'தமிழக' மாவட்டம்!
- 'கோவையில் கழிவுகளை அகற்ற இன்று முதல் ரோபோ!'.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி!
- கோவை 'அதிமுக' எம்.எல்.ஏவுக்கு... உறுதியான 'கொரோனா' தொற்று!
- பாத்ரூம் மூலையில பதுங்கியிருந்துச்சு... காட்டுல கொண்டு போய் விட்றலாம்னு இருந்தப்ப தான்... 'பைக்குள்ள' அந்த சம்பவத்த பாத்து... ஆடிப்போயிட்டேன்!
- "நான் சுஷாந்த் சிங் கிட்ட போறேன்" 'வடமாநில' இளைஞர் செய்த 'திடுக்கிடும் காரியம்...' 'கடிதத்தைக்' கண்டு 'அதிர்ந்த போலீசார்...'
- 'எனக்கு ஓகே, உனக்கு ஓகே வா'?... '66 வயது முதியவர் கடிதம் மூலம் போட்ட பிளான்'... ஆடிப்போன சிறுமியின் குடும்பம்!