பெற்றோர் வர தாமதம் .. சாலையில் தனியாக காத்திருந்த மாணவி.. நெகிழ வைத்த காவல்துறை அதிகாரியின் செயல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணப்பன் சாலையில் பெற்றோருக்காக காத்திருந்த மாணவியை அவரது வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்று இறக்கிவிட்டிருக்கிறார். மேலும் உரிய நேரத்தில் மகளை அழைத்து வருமாறும் அந்த மாணவியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | செல்போனை தூக்கிட்டு ஓட நெனைச்ச திருடன்.. ஷாக் ஆன உரிமையாளர்.. கடைசியா நடந்ததை அவரே எதிர்பார்க்கல.. வீடியோ.!

வேலூர் பகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு எப்படி இருக்கின்றன? என்பது குறித்து இந்தப் பகுதிகளில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் ஏதேனும் அப்பகுதியில் நடைபெறுகின்றனவா? எனவும் அந்தப் பகுதி மக்களிடையே அவர் விசாரணை நடத்தினார்.

இதன்பிறகு ஓட்டேரி ஏரி அருகே உள்ள சாலை சந்திப்பு பகுதியில் அவர் பயணிக்கும் போது பள்ளி மாணவி ஒருவர் தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். இதனால் தனது காரை நிறுத்திச் சொன்ன காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணப்பன் அந்த மாணவியிடம் ஏன் இப்படி தனியாக நின்று கொண்டிருக்கிறாய்? என விசாரித்து இருக்கிறார்.

அப்போது அந்த மாணவி தனது பெயரையும் தான் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல யாரும் வராததால் காத்திருப்பதாகவும் அந்த பள்ளி மாணவி தெரிவித்து இருக்கிறார். இதைக் கேட்ட ராஜேஷ் கண்ணப்பன் மாணவியை தனது காரில் அமர வைத்து மாணவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று இறக்கி விட்டிருக்கிறார்.

மேலும் மாணவியின் பெற்றோரிடம் இதுபோன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மாணவியை தனியாக அனுப்ப வேண்டாம் என  மாணவியின் பெற்றோருக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களிடம் காவல்துறையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா? மர்ம நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என்றும் ராஜேஷ் கண்ணப்பன் கேட்டறிந்தார். தனியாக நின்றிருந்த பள்ளி மாணவியை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணப்பன் தனது காரில் ஏற்றி வீட்டில் இறக்கி விட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Also Read | கர்ப்பமா இருந்தது தெரியாமலேயே விமான பயணம்.. நடுவானில் வந்த பிரசவ வலி.. பதறிப்போன பணியாளர்கள்..!

VELLORE, VELLORE SP, SCHOOL STUDENT, HOUSE, CAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்