‘என் சாவுக்கு இவங்கதான் காரணம்’.. கொய்யாப்பழம் பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொய்யப்பழம் பறிக்கச் சென்ற சிறுவனை செருப்பால் அடித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் தங்கராஜ் (18). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த சிறுமி தங்கராஜிடம் கொய்யாப்பழம் கேட்டுள்ளார். அப்போது அங்கே வந்த சிறுமியின் தந்தை கருணாகரன், தனது மகளிடம் காதலை தெரிவிக்க தங்கராஜ் வந்திருப்பதாக எண்ணி செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனை தங்கராஜ் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரும் தங்கராஜைதான் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தங்கராஜ் தனது மரணத்துக்கு காரணம் கருணாகரன் மற்றும் அவரது மகள் என எழுதி வைத்துவிட்டு காட்டூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தங்கராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சிறுவன் தற்கொலைக்கு காரணம் கொய்யாப்பழம் பிரச்சனையா? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ராங் நம்பர்’ மூலம் அறிமுகமான இளைஞர்.. கணவருக்கு தெரியாமல் மனைவி செய்த காரியம்.. வெளியான பகீர் வாக்குமூலம்..!
- ஒரே ஒரு ‘பவர் நேப்’ .. அப்றம் பாருங்க ‘குழந்தைங்க’ எப்படி ‘பவரா’ இருக்காங்கனு! ஃபிட் இந்தியாவின் ‘தரமான’ முன்னெடுப்பு!
- ‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!’.. ‘நல்லாசிரியர் உட்பட 2 பேருக்கு’.. ‘உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு’!
- ‘வீட்டு வாசலில்’... ‘தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி’... ‘இளைஞர்களால் நடந்த பயங்கரம்’... ‘2 ஆண்டுகள் கழித்து தெரியவந்த அதிர்ச்சி’!
- 'கண்டிப்பா இவன் நம்ம பய தான்'... 'மெலனியாவை அசர வைத்த சுட்டி பையன்' ... வைரலாகும் வீடியோ!
- 'இந்த விஷயத்துல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல'... 'ஃபீல் பண்ண வச்சிட்டீங்க'... உருகிய மெலனியா!
- ‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு’.. ‘வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர்’.. திருப்பூர் அருகே பயங்கரம்..!
- ‘மனைவியை கொலை பண்ணிட்டேன்’.. ‘நானும் தற்கொலை பண்ணப்போறேன்’.. மாமனாரை மிரளவைத்த ‘போன்கால்’!
- ‘கரூர் கலெக்டர் ஆபீஸ் முன் இளைஞர் செய்த விபரீத செயல்’.. கதறியழுத குடும்பத்தினர்.. பரபரப்பு சம்பவம்..!
- 'உங்க சபலத்துக்காக குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க'... 'டாக்டர் மனைவி கொலை'... அதிரவைக்கும் திருப்பம்!