'பயணிகள் ரயிலை'.. 'பழுதுபார்த்துவிட்டு தண்டவாளத்தைக் கடந்த ஊழியர்'.. 'எக்ஸ்ப்ரஸ் ரயிலால் நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜோலார்ப் பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்த ரயில்வே ஊழியர், எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
அரக்கோணத்திலிருந்து இருந்து ஜோலார்பேட்டை வழியாக சேலம் போகக் கூடிய பயணிகள் ரயில், கேத்தாண்டபட்டி அருகே வந்துகொண்டிருந்தது. ரயிலின் மேற்புரத்தில் செல்லும் மின்சாரக் கம்பியைத் தொடும் மின்சாரத் தாங்கி கீழே விழுந்து உடைந்ததை அடுத்து, அவ்வழியாக செல்லவிருந்த ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டன.
பின்னர் பழுதான ரயில் பழுதுபார்க்கப்பட்டதன் பின்பு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால், ரயிலைப் பழுதுபார்த்த ரயில்வே ஊழியர் கோபிநாத், தன் பணிமுடிந்து நீண்ட நேரம் கழித்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலை பழுதுபார்த்த ஊழியர் உயிரிழந்தது குறித்து ஜோலார்ப் பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மயக்க ஸ்பிரே’ அடித்து பாட்டியை கொலை செய்த கொள்ளுப் பேரன்..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- 'ரயிலுக்குள் பயணி செய்த காரியம்'.. அடுத்தடுத்து தீப்பிடித்த ரயில் பெட்டிகள்... 65 பேர் பலியான சோகம்!
- 'குத்துயிரும் குலையுயுருமாய் கர்ப்பிணி பெண்'.. பேஸ்புக் காதலனின் முடிவு.. பதறவைத்த சோக சம்பவம்!
- ‘இருசக்கர வாகனத்தில் வந்தபோது’... ‘மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண்’.. ‘நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- 'எதிரே வந்த ரயில்'...'தண்டவாளத்தை கடந்த யானை'...ஒரே செகண்ட் தான்'...மனதை ரணமாக்கும் வீடியோ!
- சடலத்தை கொண்டு செல்ல பாதை இல்லை..! ஆற்றில் நீந்தியபடி தூக்கிச் சென்ற அவலம்..!
- சுபஸ்ரீ மரணம்: ஆளும்கட்சியோ,எதிர்க்கட்சியோ யார் பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை-கலெக்டர் அதிரடி!
- 'பெற்றோருக்கு' எதிராக 'புகார்' கொடுத்த புது மாப்பிள்ளை'.. காரணத்தை கேட்டா அசந்துருவீங்க!
- 'வேலூர் புதுமண தம்பதிக்கு'...'சர்ப்ரைஸ்' கொடுத்த 'பிரதமர் மோடி'...'ஆச்சரியத்தில் நெகிழ்ந்த குடும்பம்'!