“20 வருஷமா அருள்வாக்கு.. இரிடியம் மோசடி! .. ரூ.10 லட்சம் கொடுத்தா .. ரூ.5 கோடி!”.. ‘பரபரப்பை’ கிளிப்பிய 'சாந்தா சாமியார்' வாக்குமூலம்? என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலுார் தொடங்கி, வடதமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பிரபலமாகிய திருவலம் சாந்தா சாமிகள் என்ற சாந்தகுமார் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை பொதிகை நகரைச் சேர்ந்த 50 வயதான கேசவமூர்த்தி என்பவர் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட இவர், அங்குள்ள திருவலம் பகுதியில் சர்வமங்கள பீடம் என்கிற கோவில் மற்றும் ஆசிரமம் நடத்தி வரும் சாந்தகுமார் எனும் சாந்தா சாமிகளுடன் 2010ம் ஆண்டு அறிமுகமானார்.

பின்னர், பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார் ரெட்டி என்பவருடன் பெரிய முதலீட்டில், தான் ஒரு தொழில் செய்து வருவதாகவும், 10 லட்சம் கொடுத்தால் மூன்றே மாதங்களில் 5 கோடி ரூபாயாக மாற்றித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூற, அதை கேட்ட கேசவமூர்த்தியோ மனைவி நகை மற்றும் வீட்டை அடமானம் வைத்து 45 லட்சம் ரூபாயைக் கொடுக்க, சாமியாரோ பணத்தை தராததாக தெரிகிறது.

அத்துடன் தன் மீது எஸ்பியிடம் புகார் கொடுத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று சாமியார் சாந்தகுமார் மிரட்டியதுடன், வாணியம்பாடி மாந்திரீகரிடம் கூறி சூனியம் வைத்து விடுவதாக மிரட்டியதாகவும் கேசவமூர்த்தி புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல், பல வருடங்களாக ரைஸ் புல்லிங் என்ற மோசடியையும் சாமியார் தொழிலாகவே நடத்தி வருவதாகவும், கேசவமூர்த்தி குற்றம் சாட்ட, திருவலம் பகுதியிலுள்ள சர்வமங்கள பீடத்தில் இருந்த சாந்தா சாமியார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

விசாரணையில் 44 வயதான சாந்தா சாமியார் 20 ஆண்டுகளாக அருள் வாக்கு சொல்லி பக்தர்களிடம் பணம் வசூலித்தது, கார் , பங்களாவுக்கு ஆசைப்பட்டு பெங்களூரு கமலக்கார ரெட்டியுடன் சேர்ந்து, இரிடியம் மோசடி,  10 லட்சம் கொடுத்தால் மூன்றே மாதங்களில் 5 கோடி ரூபாய் மாற்றித் தருவதாகக் கூறி பணத்தைப் பறிப்பது உள்ளிட்டவற்றை செய்துவந்தது தெரியவர, 3 பிரிவுகளின் கீழ் சாமியார் வழக்குப் பதிவு செய்த, போலீசார் அவரைக் கைது செய்து, வாலாஜாபேட்டை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனை அடுத்து அரக்கோணத்தில் உள்ள சிறையில் சாமியார் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். மேலும் வழக்கில், பெங்களூரு கமலக்கார ரெட்டி, அரசுப் பள்ளி ஆசிரியரான ஆர்க்காடு புனிதவல்லி உள்ளிட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்