"அவன் தான் எனக்கு எல்லாமே".. பைக் விபத்தில் உயிரிழந்த மகன்.. விபரீத முடிவை எடுத்த தாய்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாநகரட்ச்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை பழைய காலணி என்னும் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி பெயர் காஞ்சனா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக செந்தில்குமார் இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றது. கணவர் செந்தில்குமார் இறப்பிற்கு பிறகு தனது ஒரே மகனான ஆனந்தனை சிறுவயதிலிருந்தே மிக சிறப்பாக கவனித்தும் வந்துள்ளார் தாயார் காஞ்சனா.

Advertising
>
Advertising

Also Read | லண்டனில் இருந்த காதலிக்காக காதலன் கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ்.. நெகிழ்ந்து கலங்கிய பெண்!!

ஒரே ஒரு மகன் என்பதால் ஆனந்தன் மீது தாய் காஞ்சனா அதீத பாசம் செலுத்தியும் அவரை கவனித்து வந்துள்ளார். மேலும் காஞ்சனா தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றிலும் வேலை செய்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

பைக் பயணம் மீது ஆர்வம்

கணவனை இழந்த காஞ்சனா தனது மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த சூழலில், கார் ஓட்டுனராகவும் ஆனந்தன் வேலை செய்து வந்துள்ளார். அதே போல இந்த காலத்தில் இளைஞர்களில் ஏராளமானோருக்கு பைக் ஓட்டுவதில் தீராத பிரியம் உண்டு. அந்த வகையில் பல கிலோமீட்டர் தூரம் மிகுந்த ஈடுபாடுடன் பைக் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களில் ஒருவர் தான் ஆனந்தனும். இதனை வழக்கமாகக் கொண்டுள்ள ஆனந்தன், பல்வேறு இடங்களிலும் பைக் பயணம் மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இப்ப மகனும் இல்லையே

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிலர் குழுவாக இணைந்து திருச்சிக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் ஆனந்தனும் ஒருவர். இந்த பயணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவித சம்பவம் அரங்கேறி உள்ளது. திருச்சி அருகே வைத்து விபத்து ஒன்றில் சிக்கிய ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்து போனதாக சொல்லப்படுகிறது. கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரே ஒரு மகன் என செல்லம் கொடுத்து வளர்த்து வந்த காஞ்சனாவிற்கு மகனின் மரணம் கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சனாவின் விபரீத முடிவு

ஒரு பக்கம் கணவரும் இல்லை, மறுபக்கம் தான் செல்லமாக வளர்த்த மகனும் இல்லை என்ற சூழலில், துக்கமும் கடுமையாக காஞ்சனாவை அடைத்துள்ளது. இந்த நிலையில் விபரீத முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார் காஞ்சனா. இதற்காக காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்ற காஞ்சனா, அங்கே பிளாட்ஃபாரத்தை கடந்து சென்று அந்த ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் முன்பு நின்று கொண்டதாக கூறப்படுகிறது.

தண்டவாளத்துக்கு நடுவே பெண் நிற்பதை பார்த்ததும் ரயிலை நிறுத்தவும் ஓட்டுனர்கள் முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனாலும் ரயில் நிற்காமல் காஞ்சனா மீது மோதியதாக சொல்லப்படும் நிலையில் இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காஞ்சனா உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து காவல்துறையினருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சனாவின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரு தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் மற்றும் மகன் ஆகிய இருவரும் இல்லாத சூழலில் தனியாக வசித்து வந்த காஞ்சனா, விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | போனில் அழைத்து வர்ணனை செய்வதை பாராட்டிய MS தோனி.. மனம் நெகிழ்ந்து போன தினேஷ் கார்த்திக்!!

 

VELLORE, MOTHER, SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்