'தமிழ்நாட்டில் இப்படி ஒரு மகனா?'.. நெகிழ வைக்கும் செயலால் பெற்றோரின் இதயத்தை வென்ற நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதியோர் இல்லங்களில் அப்பா, அம்மாவை கொண்டு சென்று விடும் காலமே வந்த பிறகும், அப்பா அம்மாவுக்கு கோயில் கட்டி அசத்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

வேலூரின் சலவன்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் தனது தந்தை வெள்ளை நாயக்கர் மற்றும் தாய் ஜெகதாம்மாள் தன்னை வறுமை தெரியாமல், கஷ்டப்பட்டு வளர்த்து தான் இன்று சொகுசாக இருப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்பதாலும், அப்பா - அம்மாவின் தன்னலமற்ற பாசம் காரணமாகவும் அவர்களின் மேல் அதிக பாசம் வைத்துள்ளார்.

ஆனால் இவரது தாய், தந்தையர் இருவரும் 2008-ஆம் ஆண்டிற்குள் இறந்துவிட, அவர்களின் சமாதியைச் சுற்றி 37 லட்சம் ரூபாய் செலவில் கோவில் ஒன்றை எழுப்பி, அதில் அவர்கள் நிற்பது போன்ற சிலைகளை வடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், 'என்னை சுமந்த தாயும், மனதில் சுமந்த தந்தையுமே சிறந்தவர்கள்', 'தாயிற் சிறந்த கோயிலுமில்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை'  உள்ளிட்ட பெற்றோரைப் புகழும் பொன்மொழிகளையும் இக்கோயிலினுள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ராமச்சந்திரனும் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அவர் இருக்கும்வரை, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும், அப்பா-அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு வேட்டி சட்டைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன. ராமச்சந்திரனின் உடலும் இந்த அப்பா, அம்மா கோயிலிலேயே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தன்னைப் போலவே இந்த கோவிலை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பெற்றோரை மதிக்க இந்த கோயில் கற்றுத்தர வேண்டும் என்றும் தம் பிள்ளைகளிடம் கூறியுள்ளார்.

VELLORE, PARENTS, TEMPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்