ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: போலீசுக்கு தண்ணி காட்டிய போலி ‘சிங்கம்’.. ஷேர் ஆட்டோவில் ஜெயிலுக்கு போனது..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர்: நகை கடை கொள்ளையில் ஒரு வாரமாக போலீசாருக்கு தண்ணி காட்டிய போலி சிங்கம், சிறைக்கு ஷேர் ஆட்டோவில் சென்றது.

Advertising
>
Advertising

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த 15ம் தேதி இரவு, பின்பக்க சுவற்றை துளையிட்டு, சுமார் 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

உடனே இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

நகைக்கடை உள்ளே இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது, ஸ்பிரே அடித்து, சிங்க முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து கொள்ளையன் நகைகளைத் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீவிர தேடுதலுக்கு பின்னர் திருடன் குறித்து தகவல் கிடைத்தது.

வேலூரில் நகை கடையில் சிங்கம் முகம் கொண்ட முகமூடியைக் அணிந்து கோடீஸ்வரர் கனவுடன் கொளையடித்த டீக்காராமனை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததை பார்த்த பொதுமக்கள் ஏதோ மிகப்பெரிய தீவிரவாதி கும்பலை சேர்த்தவர் போல் இருப்பார் என்று நினைத்தனர்.

பெரும் போலீஸ் படை டீக்காராமனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது.‌ கடைசியில் இன்று விசாரணை முடித்து கொள்ளையன் (டீக்காராமன்) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து வேலூர் மத்திய சிறைக்கு ஷேர் ஆட்டோவில் டீக்காராமன் அழைத்து செல்லப்பட்டார். பேராசை பெரும் துன்பம் என்பது போல சிங்க முகம் அசிங்க முகமாக ஷேர் ஆட்டோவில் ஜெயிலுக்கு சென்றது.

JOSALUKKAS, JEWELLERY, THEFT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்