'6 மாதங்கள் கழித்து... காய்கறி விலையில் அதிரடி மாற்றம்!'... 'இலவசமா கொடுக்கப்படும் கறிவேப்பிலையின் தற்போதைய விலை தெரியுமா?'... வெங்காயம், தக்காளி புதிய விலைப் பட்டியல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதே சமயம் கறிவேப்பிலை விலை அதிகரித்துள்ளதால் இலவசமாக வழங்கப்படுவதில்லை.

சென்னை கோயம்பேடு சந்தையில் 6 மாதங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொங்கலுக்குப் பின்னர் வெங்காய வரத்து அதிகரித்ததால் விலையும் தொடர்ந்து குறையத் தொடங்கியது.

இன்றைய நிலவரப்படி, கோயம்பேட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் விலை 15 ரூபாயாக குறைந்துள்ளது. தக்காளி விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

சரியான பருவமழையால் விளைச்சல் அதிகரித்ததும், கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்ததுமே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது. அதேசமயம் ஒரு கட்டு கறிவேப்பிலை 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதுநாள் வரை காய்கறி வாங்கும் போது இலவசமாக வழங்கப்பட்டு வந்த கறிவேப்பிலை, தற்போது அதிக அளவில் காய்கறி வாங்கினால் மட்டுமே தரப்படுகிறது. விலை வீழ்ச்சி பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும், அதிக அளவில் காய்கறிகள் வீணாவதால் இழப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

VEGETABLES, PRICE, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்