23 வருடத்திற்கு முன்பு கிரிக்கெட் மைதானமாக வீராணம்.. சோழர்கள் வெட்டிய ஏரியின் பழமையான VIDEO..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புகழ்பெற்ற வீராணம் ஏரியின் பழமையான வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | அரசர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.. பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது இந்த வீராணம் ஏரி. இது சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். எந்தவித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத அந்த காலத்திலேயே இவ்வளவு பெரிய ஏரியை சோழர்கள் வெட்டியிருப்பது நிச்சயமாகவே மிகப்பெரும் சாதனை தான். இந்த ஏரி இராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. இராஜாதித்ய சோழன் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாரயணன் ஆகும். இப்பெயரே வீரநாரயணன் ஏரி என அழைக்கப்பட காரணமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. கால போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என மருவியது. இந்த ஏரி 15 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.

அந்த பகுதியின் விவசாய தேவைகளுக்கு மக்கள் இந்த ஏரியையே நம்பி இருக்கின்றனர். சென்னையில் இருந்து இந்த பிரம்மாண்ட ஏரி 235 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் நீர் கொண்டுவர கடந்த 2004 ஆம் ஆண்டு வீராணம் திட்டம் துவங்கப்பட்டது. இதன்மூலம் சென்னையின் முக்கிய நீர் மூலமாக வீராணம் திகழ்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் மழைப்பொழிவு இல்லாத காலங்களில் இந்த ஏரி வறண்டு போனது. இதனையடுத்து மக்களின் நீர் தேவைக்கு அத்தியாவசியமான ஏரியை சீரமைக்க தமிழக அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது. இதன் பலனாக கடந்த சில ஆண்டுகளாகவே நீர் நிரம்பி காணப்படுகிறது வீராணம் ஏரி. இதனிடையே, தண்ணீர் இல்லாமல் இந்த ஏரி வறண்டு போயிருந்த நேரத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வர்ணம் பூசப்பட்ட நகர பேருந்து ஒன்று பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Also Read | ரசகுல்லா தீர்ந்து போச்சா?.. திருமண வீட்டில் இருவீட்டார் இடையே பிரச்சனை.. அடுத்த வினாடி நடந்த அதிரவைக்கும் சம்பவம்..!

VEERANAM LAKE, வீராணம் ஏரி

மற்ற செய்திகள்