‘வாட் வரி குறைப்பு’!.. புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை.. லிட்டருக்கு எத்தனை ரூபாய் குறையும்..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவரும் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்படுவதாக, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த 2020 ஆகஸ்ட் 29-ம் தேதி புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் உடனடியாக குறைக்க உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் புதுச்சேரியின் அனைத்துப் பிராந்தியங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.40 அளவில் குறைய வாய்ப்புள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்