"Love-க்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல".. நாடுகளைக் கடந்த காதல்.. தென் கொரிய காதலியை கரம் பிடித்த தமிழக வாலிபர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென் கொரிய காதலியை பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழ்நாட்டு வாலிபர் திருமணம் செய்து கொண்டுள்ள நிகழ்வு, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பொதுவாக, இருவருக்கு இடையே உருவாகும் காதல் என்பது மதம், இனம், மொழி, நாடு, நிறம், வயது என எதையுமே ஒரு தடையாக பார்க்காது.
இவை அனைத்தையும் கடந்து உருவாகும் உன்னதமான காதல், நிச்சயம் பல்வேறு முயற்சிகளைக் கடந்து கைகூட தான் வழி செய்யும்.
அந்த வகையில் தான், கடல், மலை என அனைத்தையும் கடந்து கடைசியில் சேர்ந்தும் காட்டி காதலில் வென்றுள்ளது இந்த ஜோடி. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக் குட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் - செல்வராணி ஆகியோரின் மகன் பிரவீன் குமார். ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற பிரவீன், மேற்படிப்புக்காக தென் கொரியா சென்று படித்து முடித்த பின், அதே நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில், பிரவீன் குமாருக்கு பூசான் மாகாணத்தை சேர்ந்த சேங்வான்முன் என்ற பெண் மீது காதல் உருவாகி உள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கடல் கடந்த தங்களின் காதலை பெற்றோர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வைத்து பிரவீன் குமார் - சேங்வான்முன் திருமணம் படு ஜோராக நடைபெற்றது.
காதலிக்கு தாலி கட்டி பிரவீன் குமார் திருமணம் செய்து கொண்ட நிலையில், அம்மி மிதித்தல், மெட்டி போடுதல் என தமிழக கலாச்சார முறைப்படி சடங்குகளும் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, சேங்வான்முன் குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாணியம்பாடி வந்தடைந்தனர்.
அதே போல, ஏராளமான குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரவீன் குமார் - சேங்வான்முன் திருமண புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதலி அளித்த புகார்.. கைதாகி வெளியே வந்ததும் அவரையே கரம் பிடித்த இளைஞர்.. ஜோராக நடந்த திருமணம்!!
- "குண்டா இருக்கேன்னு டைவர்ஸ் கேக்குறாரு".. கண்ணீருடன் காவல்நிலையத்துக்கு சென்ற மனைவி.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!
- பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு பறந்து வந்து.. பெண்ணை கரம்பிடித்த 54 வயது நபர்.. வைரலாகும் திருமண வீடியோ!!
- விருந்துல அப்பளம் வைக்காததால் ஆத்திரம்.. களேபரமான கல்யாண மண்டபம்.. தெறிச்சு ஓடிய உறவினர்கள்..
- "நீங்க வரலைன்னா சோறு மிச்சம்".. Trend ஆகும் திருமண அழைப்பிதழ்.. "சாப்பாடு, Gift பத்துன விஷயத்துக்கே லைக்ஸ அள்ளி போடலாம்"
- "ஓடுனா மட்டும் விட்டுடுவோமா?".. சாலையில் வாலிபரை துரத்திய இளம்பெண்.. "இப்படி பண்ணிட்டு போனா யாரு தான் துரத்த மாட்டாய்ங்க"
- "கட்டுனா அவர மட்டும் தான்".. 37 வயசு காதலனுக்காக.. பல வருசமா காத்திருந்த 70 வயது பெண்.. கடைசியில் நடந்தது என்ன??
- "கே எல் ராகுல் கல்யாணம் எப்போ?".. நடிகர் சுனில் ஷெட்டி பகிர்ந்த விஷயம்??.. வெளியான அதிரடி தகவல்!!
- கல்யாண Invitation-ஆ? இல்ல Meme-ஆ? வடிவேலு, பார்த்திபன்னனு ஒரே ரகளைதான்... அதுலயும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி அல்டிமேட்.. யாருய்யா இவரு
- காதல் செய்ததால் குடும்பத்தை பிரிந்த பெண்.. 56 வருஷம் கழிச்சு நடந்த எமோஷனல் சம்பவம்!!