'சிறு' வியாபாரிகளின் 'பழவண்டியை' குப்புறக் 'கவிழ்த்த' நகராட்சி 'அதிகாரி' மீது எடுக்கப்பட்ட 'அதிரடி' ஆக்ஷன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவல் காரணமாக 3வது பொது முடக்கத்தை சில தளர்வுகளுடன் மீண்டும் மத்திய அரசு நீட்டித்ததை அடுத்து, தமிழக அரசும் அந்த தளர்வுகளின் அடிப்படையில் 34 வகையான கடைகளை திறப்பதற்கு நிபந்தனைகளுடன் அனுமதித்து.
இதனை அடுத்து வருமானமின்றி வீட்டிலேயே 40 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த சிறுகுறு வியாபரிகள் பலரும் மகிழ்ச்சியுடன் கடைகளைத் திறக்கத் தொடங்கினர். எனினும் சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையோர பழக்கடைகள் மற்றும் காய்கறிக் கடைகளை நடத்தி வந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து வாணியம்பாடி நகராட்சி ஆணையர் நேரில் சென்று அவைகளை பார்வையிட்டதோடு சில வியாபரிகளின் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் இருந்த பழங்களை எடுத்து தெருவில் வீசியதோடு பழவண்டிகளை குப்புறக் கவிழ்த்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.
இதனை பலரும் கண்டித்த நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்து பேசிய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், பழக்கடைகளில் வியாபாரிகள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை வலியுறுத்தி கடைநடத்தாததும் கொரோனா தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டார். இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த பொறுப்பில் மேல்விசாரம் நகராட்சி பொறியியாளர் பாபு அமர்த்தப்படுவார் என்று தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கு 'தளர்வு' அறிவிச்சிட்டாங்க... ஆனாலும் அது ரொம்ப 'செரமமா' இருக்கு!
- நோய் 'எதிர்ப்பு' சக்தி ரொம்பவே அதிகம்... போட்டிபோட்டு 'வாங்கி' செல்லும் வெளிநாட்டினர்!
- தமிழகத்தில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை!.. 60க்கும் மேற்பட்டோர் பலி!.. முழு விவரம் உள்ளே
- கொரோனாவின் சித்து விளையாட்டை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள்!.. தடுப்பூசிகளுக்கு அடங்காமல் இருப்பது ஏன்?.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'வரலாறு' காணாத உச்சத்தில் 'வேலை இழப்பு...' அடுத்தடுத்த நாட்களை 'கேள்விக் குறியுடன்'... 'நகர்த்தும் லட்சக்கணக்கான இந்தியர்கள்...'
- இரண்டாம் அலை 'பதற்றம்'... மீண்டும் 'கொத்தாக' தோன்றிய பாதிப்பால்... 'முடக்கப்பட்ட' சீன நகரம்...
- ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்... 'சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி!'.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
- 'கைநிறைய சம்பளம், அமெரிக்கால வேலைன்னு ஆசையா வந்தோம்'... 'பறிபோன வேலை'... 'இந்தியாவுக்கு வர முடியாமல் தவிப்பு'... அதிர்ச்சி பின்னணி!
- "என்ன விளையாடுறீங்களா!?.. இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது!".. 20 வருஷத்துல 5 கொள்ளை நோய்கள்!.. சீனாவை ரவுண்டு கட்டி வெளுக்கும் அமெரிக்கா!
- ‘அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்’... ‘குணமடைந்த கடைசி 15 நபர்கள்’... 'கொரோனா பாதிப்பு இல்லாத 5-வது மாவட்டம்’!