'பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா!'.. 'தனிமைப்படுத்தப்பட்ட 43 காவலர்கள்'.. 'இழுத்து பூட்டப்பட்ட காவல் நிலையம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாணியம்பாடியில் பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் பணிபுரிந்த காவல் நிலையத்துக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணிபுரியும் 43 காவலர்கள் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாணியம்பாடி கிராம பெண் ஆய்வாளர் தங்கிருந்த செட்டியப்பணூர் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இவர் தங்கியிருந்த வீட்டிற்கு அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மருத்துவர் குழுவினர், வருவாய்த் துறையினர் என பலரும் சென்று ஆய்வு மேற்கொண்டதை அடுத்து, பெண் காவல் ஆய்வாளர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தவிர, இதனால் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் மூடப்பட்டதோடு, அக்காவல்நிலையம்,  வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்