தேர்தலில் தோல்வி அடைந்தாலும்.. வீடு வீடாக சென்று கேக் வழங்கிய சுயேச்சை வேட்பாளர்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் ஒருவர் கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மும்முனை போட்டி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், 29-வது வார்டில் திமுக சார்பில் சுபாஷினி என்பவரும், அதிமுக சார்பில் பிரியங்கா என்பவரும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து சீதாலட்சுமி வடிவேல் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். இதன் காரணமாக, 29-வது வார்டில் இருமுனை போட்டி மும்முனை போட்டியாக மாறியது.

மக்களுக்கு நன்றி:

இரு நாட்களுக்கு முன் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 29 வார்டில் இருந்த 2,948 வாக்குகளில், 1,724 வாக்குகள் மட்டுமே பதிவானது. அதில், திமுக வேட்பாளர் சுபாஷினி 1,226 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பிரியங்கா 268 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சுயேச்சையாக போட்டியிட்ட சீதாலட்சுமி வடிவேல் 230 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்தார். தேர்தலில் தோல்வியடைந்தாலும் மனம் தளராத சீதாலட்சுமி தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தனது வீட்டில் 5 கிலோ எடையுள்ள கேக் ஒன்றை வெட்டியுள்ளார்.

அந்த கேக்கில் ‘நேர்மையான வாக்குகளுக்கு நன்றி’ என எழுதி அதை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டியுள்ளார். பின்னர் வெட்டிய கேக் துண்டுகளை எடுத்துக்கொண்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வீடு, வீடாகச் சென்று பகிர்ந்து கொண்டார்.

எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம்:

இதுக்குறித்து கூறிய சீதா லட்சுமி, 'பெரிய கட்சிகள் எல்லாம் ஆயிரக்கணக்கில் செலவழித்து தேர்தலில் போட்டியிட்டனர். நான் வாங்கிய 230 ஓட்டுக்களும் பணம் கொடுக்காமல் பெற்றுள்ளேன். இதுவே எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம்' எனக் மக்களிடையே கூறியுள்ளார்.

சீதாலட்சுமியின் இந்த பேச்சை கேட்ட மக்களை பொதுமக்கள் தேர்தலில் வெற்றிப்பெற்றவரே நன்றி தெரிவிக்க வராதபோது தோல்வியடைந்த வேட்பாளர் கேக்குடன் வீடு தேடி வந்த நன்றி தெரிவித்த சம்பவத்தால் நெகிழ்ச்சியடைந்தனர்.

பணம் கொடுக்க மாட்டோம்:

சீதாலட்சுமியின் கணவர் வடிவேல் இந்த சம்பவம் குறித்து கூறும் போது, 'இந்த தேர்தல் எங்களுக்கு முதல் வாய்ப்பு, பணம் இருந்தால்தான் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்ற எண்ணத்தை நாங்கள் தவிடுபொடியாக்கியுள்ளோம். வாக்கு சேகரிக்கும்போதே நாங்கள் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம், வெற்றி பெற்றால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் என உறுதி அளித்தோம்.

இப்போது எங்களுக்கு கிடைத்த 230 வாக்குகள் நாங்கள் நேர்மையாக பெற்றோம். நேர்மையான அரசியலை மக்கள் விரும்புகின்றனர். அரசியலில் ஈடுபட இளைஞர்கள் முன்வர வேண்டும். விலை போகாத மக்களின் வாக்குகளை பெற இளைஞர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு' எனக் கூறியுள்ளார்.

VANIYAMBADI, CAKE, வாணியம்பாடி, சுயேச்சை வேட்பாளர், கேக், சீதாலட்சுமி வடிவேல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்