உடைந்துபோன குடிநீர் குழாய்... போதாத குறையாக பெய்த மழை!.. 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கோரம்!.. கதறும் மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாணியம்பாடியில் குடிநீர் குழாயை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் 7 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தைப் பகுதியில் நகராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டி அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக்குழாயை சரி செய்யும் பணிக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாணியம்பாடி பகுதியில் மழை பெய்ததால் குழி முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் குழி குறித்து ஏதும் தெரியாமல் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் குழிக்குள் விழுந்துள்ளான். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பூசாரி அங்கிள் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டார்...' 'அன்பாக பேசி தனியே அழைத்து சென்று...' பதற வைக்கும் சிறுமியின் வாக்குமூலம்...!
- '4 வயசு சிறுமிக்கு முன்ன வச்சு...' 'அப்பா, அம்மா ரெண்டு பேரையும் துடிதுடிக்க...' ' உறைந்து நின்ற குழந்தை கடைசியில்...' குலைநடுங்க செய்யும் கொடூர சம்பவம்...!
- 'தொப்புள் வழியா மலம் போகுது...' 'ஒரு குழந்தை பிறந்து கொஞ்சம் நாள்லையே இறந்துடுச்சு...' உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்...!
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?
- 'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க!'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்!.. என்ன நடந்தது தெரியுமா?
- 'வரிசையில் காத்திருந்த விவசாயி'... 'திடீரென மயங்கி விழுந்து நடந்த சோகம்'... 'அதிர்ச்சியில் உறைந்த மக்கள்'!
- 'மனிதர்களை கொன்ற கொரோனாவால்... மனிதத்தை கொல்ல முடியவில்லை!'... 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை... கொரோனா தடுப்பு பணிகளுக்கு... அள்ளி வழங்கும் நெஞ்சங்கள்!
- 'நண்பனைக் காப்பாற்றும் முயற்சியில் சிறுவன்!'... தண்ணீர் குடிக்க சென்ற போது... சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!... கிராமத்தையே கலங்கடித்த சோகம்!
- 'லைசன்ஸ் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி...' 'கொரோனா பாதிப்பு இருப்பதால்...' தற்காலிக அனுமதி என தமிழக அரசு அறிவிப்பு...!
- 'தாய் மற்றும் தாத்தாவின் சடலத்துடன் தனிமையில் இருந்த சிறுவன்!'... செய்வது அறியாமல் சிறுவன் எடுத்த விபரீத முடிவு!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!