அவரோட சிலை இன்னும் சென்னை நீதிமன்ற வளாகத்துல இருக்கு.! அட.. வனிதாவின் கொள்ளுத் தாத்தா இத்தனை புகழுக்கு சொந்தக் காரரா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், யூடியூப், சின்னத்திரை பிரபலமாகவும் வலம் வருபவர்  நடிகை வனிதா விஜயகுமார்.

Advertising
>
Advertising

Also Read | "தினமும் இரவில் ஊசி போடணும், இல்லன்னா".. கால்பந்து ராஜா மெஸ்ஸியின் வலி நிறைந்த நிஜ கதை!?

நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் பிரபலமான வனிதா, அதன்பிறகும் சில திரைப்படங்களில் நடித்தார். பின்னர் சில காலத்துக்கு பின் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்த வனிதா விஜயகுமார், இடையில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்த இவர், விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று நடனமாடினார். பிக்பாஸ் போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதனிடையே வனிதா விஜயகுமார் அண்மையில் பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார், தமது தாத்தா யாரென குறிப்பிட்டு ஒருபதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி நடிகை வனிதா விஜயகுமாரின் அம்மா வழி கொள்ளுத் தாத்தா பிரிட்டிஷ் காலத்து உயர்நீதிமன்ற நீதிபதியாம். இந்த உண்மையை வனிதா விஜயகுமார் வேறொரு தகவலுடன் இணைத்து தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆம், அதன்படி தமிழில் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவரும், தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வருபவருமான விமலா ராமனும், தானும்  நீதிபதி Sir CT முத்துசாமி ஐயரின் கொள்ளுப் பேத்தி என வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷார் அரசாங்கத்தின் மெட்ராஸ் மாகாணத்தில் உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி சர் சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளுப் பேத்தி தான் வனிதா விஜயகுமார். அவரது சிலைதான், இன்றும் சென்னை நீதிமன்ற வளாகத்தில் இருக்கிறது என வனிதா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடிய கேரள வாலிபருக்கு நேர்ந்த துயரம்!!

VANITHA VIJAYAKUMAR, VIMALA RAMAN

மற்ற செய்திகள்