சூழலியல் சிக்கலில் வண்டலூர் பூங்கா!.. வன உயிரினங்களையும் விட்டுவைக்காத கொரோனா!.. விளைவு என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மே 26ஆம் தேதிமுதல் கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மீனா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், பூங்காவில் மேலும் 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளி தொந்தரவு இருந்ததால் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் சிங்கம் மட்டுமல்லாமல் குரங்கு போன்ற மற்ற விலங்குகளையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இதற்குமுன் தெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்