'காசு இருக்கா பா'... 'அப்போ அப்படி போய் நில்லு'...கறார் காட்டிய 'வைகோ'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பணம் தராத தொண்டருடன் புகைப்படம் எடுக்க மறுத்த வைகோவின் செயல் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுக்க விரும்புவோர், கட்சிக்கு குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு வைகோவுக்குச் சால்வை அணிவிப்பதை தவிர்த்து, கட்சிக்கு நிதி வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வைகோ கட்சி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்படும் தொண்டர்களிடம் 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வைகோ நேற்று வேலூர் வழியாக காரில் சென்றார். அப்போது தொண்டர்கள் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினால், 100 ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதனிடையே ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்திறங்கிய வைகோவை உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள் அவருடன் போட்டோ எடுக்க முயற்சித்தனர்.

அப்போது தொண்டர் ஒருவர் 100 ரூபாய் இல்லாமல் போட்டோ எடுக்க வைகோ அருகில் சென்றார். அப்போது ''காசு இல்லையா, அப்போ போட்டோ எடுக்க முடியாது'' என கறாராக பேசினார். இதனால் அந்த தொண்டர் வருத்தத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

VAIKO, SELFIE, CADRES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்