'எப்பா கேட்டுக்கோங்க', 'அடுத்த வருஷம் நான் தான்' ... 'ரஜினி'யின் அதிரடி அறிவிப்புக்கு ... சரவெடி பதிலளித்த 'வைகைப் புயல்' !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2021 இல் தான் முதலமைச்சராக முடிவெடுத்துள்ளதாக நடிகர் வடிவேலு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலை குறித்து அறிவிக்க வேண்டி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடத்தினார். அப்போது பேசிய ரஜினிகாந்த் அரசியலில் வருவதற்கு மூன்று திட்டங்களை வகுத்துள்ளதாகவும், தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருக்கப் போவதாகவும், முதல்வர் பதவிக்கு வேறொருவரை நிறுத்தப் போவதாகவும் கூறினார். மேலும், இதற்கு மக்கள் தயாரெனில் நான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ரஜினிகாந்தின் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் வடிவேலு, ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அவரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது' என்றார்.

மேலும் பேசிய வடிவேலு, '2021 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகலாம் என திட்டம் வைத்துள்ளேன். சிலர் அதை கெடுக்க நினைக்கிறார்கள். நான் தேர்தலில் நின்றால் எனக்கு வாக்களிப்பீர்களா' என சிரித்துக் கொண்டே கேட்டார். மீம் கிரியேட்டர்களின் கடவுள் எனப்படும் வடிவேலுவின் இந்த பதிலை இணையவாசிகள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

VADIVELU, RAJINIKANTH, POLITICS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்