வடிவேலு பட பாணியில் அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலி திருட்டு.. பலே கில்லாடி திருடனை பிடித்த போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருமாம்பாக்கம்: வடிவேலு பட பாணியில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயினை திருடிய நபரை போலீசார் தனிப்படை வைத்து பிடித்தனர்.

Advertising
>
Advertising


'சுந்தர புருஷன்' படத்தில் செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நடிகர் வடிவேலு ஊர் ஒதுக்குப்புறமாக இருக்கும் முருகன் கோயிலுக்குள் நுழைந்து  வேலை திருடி செல்ல முயற்சிப்பார். அப்போது ஊர் மக்கள் கூடியதும் நான்தான் முருகன் வந்திருக்கேன்டா என்று சாமி வந்தது போல் நடிப்பார். இந்த காட்சி இன்று வரை சிறுவர்கள் பெரியோர் வரை ரசிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஒரு நபர் அம்மன் கோயிலுக்குள் நுழைந்து நகையை திருடி மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள கன்னியாகோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கடந்த 30ம் தேதி கோயில் பூசாரி அம்மனுக்கு பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல் சாப்பிட சென்றார். அப்போது அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாததை கணித்துள்ளார்.

இதனையடுத்து, சாமி கும்பிடுவது போல் நடித்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயினை திருடி சென்றார். சில  மணி நேரத்திற்கு பின் வந்த பூசாரி அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயினை காணவில்லை என்பதை தெரிந்ததும் பதறி போனார். சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் கோயிலுக்குள் நுழைந்து அம்மன் கழுத்தில் கிடக்கும் தாலியை திருடுவது போன்ற சிசிடிவி காட்சி சமுகவலைதளபக்கங்களில் வைரல் ஆனது.

உலகையே உலுக்கிய இளைஞரின் புகைப்படம்.. நடுக்கடலில் ஒரு லைஃப் ஆஃப் பை - வாழ்க்கை முழுக்க சோகம்!

இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக கோயில் பூசாரி அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோயில் நகையை திருடிய நபரை பிடிக்க உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருடனை பிடிப்பதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  இதனிடையே, முள்ளோடை சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வெங்கையா நாயுடு போட்ட ட்வீட்டால்.. ஒரே நாளில் ஃபேமஸ் ஆன இட்லிக்கடை.. சும்மா அள்ளுது கூட்டம்.. என்ன ஸ்பெஷல்?

அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,  பண்ருட்டியை அடுத்த திருவதியை சேர்ந்த பெயிண்டர் பாக்கியராஜ் (வயது 39) என்பதும், பச்சைவாழியம்மன் கோயிலில் புகுந்து திருடியதும் தெரியவந்தது.  இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த தாலி செயினை பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்ட பாக்கியராஜ் மீது வானூர், கோட்டக்குப்பம், மங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் கோயில் உண்டியல் உடைப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VADIVELU, STEALING TEMPLE JEWELERY, PONDICHERRY, கிருமாம்பாக்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்