இப்போ 500 கோடிக்கு அதிபதியா இருக்க வேண்டியவங்க! GH-ல கேட்க ஆள் இல்லாம இருந்துருக்காங்க...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை தேசத்திற்காக தனது சொத்துக்களை இழந்தவர்.

Advertising
>
Advertising

இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக வ.உ.சி  முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். ஆங்கிலேயர்களை வீழ்த்த ஒரே வழி வணிகம் தான் என்பதை உணர்ந்திருந்தவர்.  சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்' எனும் நிறுவனத்தை நிறுவினார்.

தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது.

‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார். கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு  இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது. இன்றைய மதிப்பிற்கு 500 கோடிக்கும்  மேல் தன் சொத்தினை தேசத்திற்காக இழந்தவர்.

VIDEO: வேலை முடிச்சிட்டு வந்த ‘IT’ பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. சிக்கிய அக்கா கணவர்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

இவர்களுடைய வாரிசுகள் தற்போது ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் சமூக சேவகியாக பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்று வரும் இவர் உதவ ஆள் இல்லாமல் போதுமான கவனிப்பும் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

டெக்னாலஜியில் அசத்திய 19 வயது மாணவர்.. மிரண்டு போன எலான் மஸ்க்.. 5,000 டாலர் வாங்கிட்டு எனக்கு 'அத' பண்ணி கொடுங்க

இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசுக்கும் அமைச்சருக்கும் இவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை பதிவிட்டு வந்தனர். இதனை கவனித்த அமைச்சர் மா.சு முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில்,"இன்று சமூக வலைதளங்களில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் கொள்ளுப்பேத்தி உடல்நலக் குறைவினால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து நாம் உடனடியாக மருத்துவமனையின் DEAN  அவர்களிடம் தொடர்புகொண்டு அரசு சார்பில் தனி உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளோம்". என கூறி உள்ளார்.  மதுரை அரசு மருத்துவமனை முதல்வரைத் தொடர்பு கொண்டு, அரசு சார்பில் தனி உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

V O CHIDAMBARAM PILLAI GRAND DAUGHTER, MADURAI GOVERNMENT HOSPITAL, சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, மதுரை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்