அமைச்சர் சொன்னது முற்றிலும் தவறு.. வீடியோ வெளியிட்டு பொங்கி எழுந்த வ.உ.சி குடும்பம்.. முழு தகவல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை: அமைச்சர் மா. சுப்ரமணியன் பதிவிட்ட பதிவு தவறானது என வ.உ.சி குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Advertising
>
Advertising

ஆபரேஷன் செய்தபோது இளையராஜா பாட்டு பாடிய சென்னை பெண்.. உலகத்துலயே இதுதான் முதல்முறை.. நெகிழ்ச்சி சம்பவம்..!

வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி தற்போது மதுரையில் வசித்து வருவதாகவும், இவர் சமூக சேவகியாக பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார் என்றும், மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்று வரும் இவர் உதவ ஆள் இல்லாமல் போதுமான கவனிப்பும் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியானது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசுக்கும் அமைச்சருக்கும் இவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை பதிவிட்டு வந்தனர்.

இதனை கவனித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் சில நாட்களுக்கு முன் முகநூலில் பதிவிட்டு இருந்தார். அதில்,"இன்று சமூக வலைதளங்களில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் கொள்ளுப்பேத்தி உடல்நலக் குறைவினால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து நாம் உடனடியாக மருத்துவமனையின் DEAN  அவர்களிடம் தொடர்புகொண்டு அரசு சார்பில் தனி உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளோம்" என கூறி முகநூலில் பதிவிட்டு இருந்தார்.  மதுரை அரசு மருத்துவமனை முதல்வரைத் தொடர்பு கொண்டு, அரசு சார்பில் தனி உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் வ.உ.சி குடும்பத்தினர் டிவிட்டரில் இதற்கு மாறாக அமைச்சரை டேக் செய்து பதிவிட்டுள்ளனர். அதில், "செக்கிழுத்த செம்மல் அவர்களுக்கு எந்த விதத்திலும் பேத்தி இல்லை என்பதை எங்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்... ஏன் இது போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்பதையும் கண்டறியுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி" என வ.உ.சியின் கொள்ளுப்பேரன் சுப்ரமணியன் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் வ.உ.சியின் மற்றொரு கொள்ளுப்பேத்தியான மரகதம் மீனாட்சி என்பவரும் அமைச்சருக்கு எதிராக டிவீட் செய்துள்ளார். அதில், "அமைச்சர் சுப்ரமணியன் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் என தவறான ஒரு நபரை கூறுகிறார். அந்த நபர் மீது போர்ஜரி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பொது வெளியில் ஒரு தகவலை பகிர்வதற்கு முன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார். இவர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் கடைசி மகன் வ. உ. சி. வாலேஸ்வரன் அவர்களின் மகள் ஆவார். பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ஆக பதவி வகிக்கிறார். இவர் இது குறித்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமைச்சரின் பதிவில் குறிப்பிட்டுள்ள தகவலை முற்றிலும் மறுத்துள்ளார்.

இன்னும் ஐபிஎல் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள ‘வேறலெவல்’ சம்பவம் பண்ணிய சிஎஸ்கே..!

VOC, V.O.CHIDHAMBARAM PILLAI, MK STALIN, TN GOVT, வ.உ.சி, சுதேசி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்