'எங்களுக்கே இங்க ஒண்ணும் இல்ல’... ‘இந்தியர், சீனர்களுக்கு வழங்குவதை நிறுத்துங்க’... ‘அதிபர் ட்ரம்புக்கு கடிதம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமெரிக்கர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவை, இந்த ஆண்டில் ரத்து செய்ய வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டினருக்கு எச்1பி விசா மற்றும் பிற சேவைகளுக்கு எச்.2பி விசா அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 1,88,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,056 பேர் உயிரிழந்துள்ளனர். 7,251 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில். யு.எஸ்.டெக்.வொர்க்கர்ஸ் எனும் அமைப்பு, ட்ரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

“கொரோனாவால் அமெரிக்க தொழில்நுட்பவியல் பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டில் இந்தியா, சீன நாட்டினருக்கு வழங்கப்படும் எச்1பி விசா மூலம் 85,000 பணியாளர்களை பணியமர்த்தும் திட்டத்தை நிறுத்த வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30?ம் தேதி வரை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுமார் 5 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதால், உதவித்தொகை கோரி 33 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர். இதையடுத்தே வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசாவை நிறுத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TECHIE, CORONAVIRUS, CHINESE, INDIANS, AMERICANS, DONALD TRUMP, PRESIDENT, H1B VISA, IT, FIELD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்