'பக்கா பிளானா'?...'பின்னாடி இருந்து வீடியோ எடுத்தாங்களா'?...'வைரலான போட்டோ'...வெளியான புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாமல்லபுர கடற்கரையில் பிரதமர் மோடி குப்பைகளை அள்ளியபோது, பின்னல் இருந்து வீடியோ எடுத்தார்கள் என வைரலான போட்டோ குறித்து புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்காக அனைத்து விரிவான ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங்யை சந்திப்பதற்காக மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது கடற்கரையில் கிடந்த குப்பைகளை அவர் எடுத்து துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.

இதனிடையே தான் மேற்கொண்ட துப்புரவு பணிகள் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட அவர், பொது இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் செயலுக்கு ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்த நிலையில், மற்றோரு தரப்பினர் இது திட்டமிட்டு செய்யப்பட்ட விளம்பர வேலை என கிண்டல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து  வெளிநாட்டு புகைப்பட குழு ஒன்று கடற்கரையில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுப்பது போன்ற போட்டோ ஒன்று வைரலானாது. அதனை பலர் ஷேர் செய்த நிலையில், இந்த குழு தான் பிரதமர் மோடி, துப்புரவு செய்தபோது அதனை வீடியோவாக எடுத்தது. எனவே இது திட்டிமிட்ட விளம்பர செயல் என பதிவிட்டு வந்தார்கள். இந்தசூழ்நிலையில் அந்த வெளிநாட்டு புகைப்பட கலைஞர்கள் இருக்கும் புகைப்படம் கடந்த  2005ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

மேலும் அந்த புகை படத்தில் இருக்கும் கட்டிடங்கள் ஸ்காட்லாந்தில் உள்ளவை எனவும், இது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என இந்தியா டூடே பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனிடையே உண்மை தன்மையை அறியாமல் இது போன்ற தகவல்களை பகிர்வதில் நெட்டிசன்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

NARENDRAMODI, MAMALLAPURAM, PLOGGING, SCOTLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்