'ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தப்பா'?...'லிவிங் டூ கெதர்' குற்றமா?...உயர் நீதிமன்றம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சமீபத்தில் சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அதன் உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதியில் நடைபெற்ற சோதனையின் போது திருமணமாகாத ஆணும், பெண்ணும் தங்கி இருந்ததாகவும், மது விற்பனைக்கான உரிமம் பெறாத நிலையில் வேறொரு அறையில் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதால் சீல் வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் காவல்துறை அளித்த விளக்கத்தை ஏற்காத நீதிபதி, திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்க கூடாது என சட்டம் ஒன்றும் இல்லாத நிலையில், திருமணமாகாத இருவரும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதே போன்று லிவிங் டூ கெதர் எப்படி குற்றம் இல்லையோ, அதே போன்று ஆணும், பெண்ணும் ஒரே அறையில் சேர்ந்து தங்குவது குற்றம் அல்ல என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் விடுதி அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் அவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் விடுதியை மூடும் போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றாததால், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 6 மாசத்துக்குள்ள.. 'மெரினா' பீச்.. இப்டித்தான் இருக்கணும்.. அதிரடி உத்தரவு!
- 'பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தி கொலை'...'தமிழகத்தை உலுக்கிய வழக்கு'...உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
- 'உங்க மருமகளை வரவேற்பதற்காக.. இன்னொருத்தரோட மகள கொன்னுருக்கீங்க!'... கொதித்தெழுந்த உயர்நீதிமன்றம்!
- வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- 'இந்த கேனை பொண்ணுகளால தூக்க முடியல'...'இத பண்ணலாம்'...'கேஸ் போட்ட பெண்'...கடுப்பான ஜட்ஜ்!
- 'புள்ள ஹாஸ்டல்ல தானே இருக்கா'...'படிக்க போன இடத்துல 'லிவிங் டுகெதர்'...'மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'!
- 'இதுல மட்டும்தான் இன்னும் ஆதார இணைக்கல.. இப்போ அதுக்கும்’ .. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- ‘விசாரணைக்கு உதவாத இந்த ஆப் எல்லாம் எதுக்கு? தடை பண்ணலாமே?’.. பொள்ளாச்சி வழக்கில் கடுப்பான நீதிமன்றம்!
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- ‘லாபத்துக்காக எக்ஸ்ட்ரா டியூஷன் எடுக்குற அரசுப்பள்ளி ஆசிரியர்களை..’ ஐகோர்ட் அதிரடி உத்தரவு!