விடிந்தால் 'திருமணம்' ... நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த 'மர்ம' நபர்கள்... அதிர்ச்சியில் உறைந்த 'மாப்பிள்ளை' குடும்பம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்காசி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் புது மாப்பிள்ளை கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாப்பிள்ளையின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடிந்தால் 'திருமணம்' ... நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த 'மர்ம' நபர்கள்... அதிர்ச்சியில் உறைந்த 'மாப்பிள்ளை' குடும்பம்

தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நாளை திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்களுடன் நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்த முனியப்பன், அவரது தாய் பஞ்சவர்ணம் மற்றும் தங்கை முனீஸ்வரி ஆகியோருடன் ஒரே அறையில் தூங்க சென்றார்.

பின்னர் இரவு இரண்டு மணியளவில் முனியப்பனின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் பதட்டத்துடன் எழுந்தனர். மர்ம நபர்கள் சிலர் மாப்பிள்ளை முனியப்பனின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடிச் சென்று விட்டனர். கழுத்து அறுபட்ட நிலையில் முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் வீடு புகுந்து புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

GROOM, MURDER, TENKASI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்