நிறைவேறிய நரிக்குறவர் மக்களின் பலவருட கனவு - முதல்வருடன் தேநீர் சந்திப்பில் நன்றி கூறி நெகிழ்ச்சி.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழங்குடியினர் பட்டியலில் தங்கள் சேர்க்கப்பட வேண்டும் என நரிக்குறவர் இன மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எவ்ளோ கூப்பிட்டும் கண் தொறக்கல".. பதற்றம் அடைந்த மனைவி.. திருமணத்தன்று இரவே புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்!!

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி, கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் எழுதி இருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் முயற்சி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பழங்குடியினர் பட்டியலில் உள்ள சமுதாயத்தினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் நரிக்குறவர்கள் உள்ளிட்ட சமுதாய மக்களுக்கும் கிடைக்கும்.

நீண்ட நாளாக தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நரிக்குறவர் இன மக்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்த நிலையில், தற்போது தங்களின் விருப்பம் நிறைவேறி உள்ளதால், அந்த சமுதாயத்தினர் அனைவரும் கடும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலைக்கு வந்துள்ளதால், இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் சிலர் மதுரையில் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். அத்துடன் அவர்களுக்கு தேநீரும் கொடுத்து உபசரித்தார் முதல்வர். இது தொடர்பான புகைப்படங்கள் முதல்வரின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்களுடன் தனது கேப்ஷனில், "பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும், ஒன்றிய அமைச்சர்கள், பிரதமர் ஆகியோரிடம் வலியுறுத்தியும் #ST தகுதி பெற வழிவகுத்தமைக்காக நரிக்குறவர் மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கான சமூகநீதிதான் என்றும் நம் இலக்கு!" என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "குழந்தைங்க பசியோட இருக்க கூடாது".. "தாயுள்ளத்தோட".. பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. உதயநிதி போட்ட ட்வீட்!!

MKSTALIN, DMK, UNION CABINET, NARIKURAVAR, TRIBE LIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்