2022-23 பட்ஜெட்: "மோசமான நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் இது!".. ப.சிதம்பரம் கருத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2022 -23ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 'மோசமான நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

நடப்பாண்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்தார்.  அப்போது பேசிய அவர், கொரோனாவால் பாதிப்பை சந்தித்த அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா மட்டும் உணவு சேவை துறைகள் அதிக சிரமத்திற்கு ஆளானதால் அவசர கால கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், 2022-23 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 விழுக்காடு வரை இருக்கும் என்று தெரிவித்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிப்பை சந்தித்த அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா மட்டும் உணவு சேவை துறைகள் அதிக சிரமத்திற்கு ஆளானதால் அவசர கால கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் பிட் காயின் போன்றவை டிஜிட்டல் கரன்சி அல்ல. வரி வசூல் குறிக்கோள்கள் சாத்தியமாகும் அளவிலேயே கணக்கிடப்பட்டுள்ளன. எல்.ஐ.சி பங்குகளை மதிப்பிடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும்  ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை சுட்டி காட்டினார் நிதியமைச்சர்.  மத்திய அரசுக்கு தற்போதைய நிகழ்காலத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டது போல இருக்கிறது. ஒரு மோசமான நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் உரை இதுதான். ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.

மத்திய பட்ஜெட்டில் வரி சலுகை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜி.எஸ்.டி வருமான வரி சலுகைகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முன்வரவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ விலைவாசி உயர்வை குறைக்கவோ நடவடிக்கை இல்லை.  சிறு குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றிருந்தது. நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போது தான் நிதியமைச்சர் உணர்ந்துள்ளார்.  ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய ஏதுவாக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. வட்டியில்லா கடன், சுருக்கமான உரையை தவிர வேறெதுவும் குறிப்பிடும் படி இதில் எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

P CHIDAMBARAM, UNION BUDGET, 2022-23 BUDGET, UNION 2022 BUDGET, CHIDAMBARAM SPEECH, NIRMALA SITHARAMAN, FINANANCE MINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்